தாய்மையை போற்றுவோம்!!!


தாய்மையை போற்றுவோம்...

தாய்மையை போற்றும் மனித இனம் என்றும் சிறப்படைவதை கண்கூடாகக் காணலாம்.பண்பட்ட,கற்றறிந்த எச்சமுதாயமும் தாய்மையை மதிக்கின்ற பாங்கினை கொண்டதாகவே என்றும் இருந்து வருகின்றது.

                                        sweet slumber

தான் ஈன்ற குழந்தைக்கு,தாய் அவனதுதந்தையை அறிமுகப் படுத்துகின்றாள்,அவன் காணும் உலகத்தை அறிமுகப்படுத்துகின்றாள்.எந்தவித சுயநலமின்றி இவ்வுலகத்தை அறிமுகப்படுத்திய தாயை,ஒவ்வொரு வரும் மதித்து போற்ற கற்றுக் கொள்ளுதல் அவசியம்.

இவ்வுலகில் சுயநலமின்றி தன்னைத் தியாகத் தீயிலிட்டு,மரணத்தின் எல்லைக்கே சென்று நம்மை ஈன்றெடுக்கும் தாயினை என்றும் போற்றிக் காத்தல் அவசியம்,தன் வாழ் நாளில் ''அன்பு'' என்ற வார்த்தையின் அர்த்தத்தை ஒவ்வொரு மனிதனும் தன்தாயிடமே கற்றுக் கொள்கிறான்.

ஒரு சுயநலமிக்க ஒரு மனைவி, தன் கணவனிடம் அவனது தாயின் இதயத்தை கொண்டு வரும்படி கேட்கிறான்.தாயைக் கொன்று அவளது இதயத்தை அவசரத்துடன் கொண்டுசெல்லும் மகன்,வழியிலே கல்தடுக்கி கீழே விழுகின்றான்.அப்போதுகூட தாயின் இதயம் ''மகனே பார்த்து நடக்கக் கூடாதா?கால் வலிக்கின்றதா?''என்று வாஞ்சையுடன் கேட்டதாம்.அதன்பின்பு,தன் தாயின் மேன்மையை உணர்ந்து மகன் அழுகின்றானாம்.

இவ்வுலகில்,நம்மை சூழ்ந்திருக்கும் அனைவரும் நம்மிடம் எதை எதையோ என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது,தாய்மட்டுமே எந்த பலனையும் எதிர்பார்க்காமல் நம்மை பாலூட்டி,சீராட்டி வளர்த்து மனிதனாக்குகின்றாள்.அப்பேர்பட்ட தாயின் வழி வந்த அனைத்து பெண்ணினத்தையும் மதிக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

                                        

இவ்வுலகத்தினை தனக்கு அறிமுகப்படுத்திய தன் தாய் சார்ந்த இனமாகிய பெண்குலத்தை மதிக்க வேண்டியது,அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது,அவர்களை இரண்டாம்தர மனிதர்களாக நடத்தாமலிருப்பது போன்ற கருத்துக்கள்அவர்களுடைய மனங்களில் சரியான விதைகளாக ஊன்றப்பட்டால்,அவர்களுடைய பிற்காலங்களில்,பெண்களை கேலி செய்வதும்,இழிவு படுத்துவதும்,கொடுமைபடுத்துவதும்,உயிரோடு எரிப்பதும் மனதில் தோன்ற வாய்ப்பில்லை.

''மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்கொளுத்துவோம்'' 

-என்றார் மகாகவி பாரதியார்.

இப்பெருமை வாய்ந்த தாய் எப்போது பெருமையடைகின்றாள் என்பதனை திருவள்ளுவர்,

                     ''ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
                      சான்றோர் எனக்கேட்டத்தாய்'' 
என்று கூறுகிறார்.

எனவே,நம்மாணவர்களை சான்றோர்களாக்க வேண்டிய கடமை ஆசிரியர்களாகிய உங்களுக்கு என்றும் உண்டு.மாணவர்களின் மனதில் தாய்மையை மதிக்க, போற்ற தேவையான நல்ல கதைகளைக் கூறி, அவர்கள் மனதை பக்குவப்படுத்தி,பெண்ணினத்தினை காக்க, மதிக்க கற்றுக் தாருங்கள்.

நன்றி,

இப்படிக்கு,
சிநேகிதி..
 

3 comments:

தாய்மை பொங்கும் அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்...

நல்லதொரு பகிர்வு...

(குறள் எண் 69)

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

நன்றி...

''மகனே பார்த்து நடக்கக் கூடாதா?கால் வலிக்கின்றதா?''என்று வாஞ்சையுடன் கேட்டதாம்" தாய்மையின் பெருமையை கூறும் வரிகள். பகிர்வு மிஹ அருமை.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More