கையடக்கமான சினிமா படக் காட்சிப் பெட்டி(projector)!


 


படத்தில் இருக்கும்  3 எம்(3 M) நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கையடக்க சினிமா படக்காட்சி பெட்டி மிகப் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு லாப் டாப், ஐ போன் அல்லது டேபிலட் கம்ப்யூட்டர் வாங்குவதை காட்டிலும் இதை வாங்கவே ஆர்வமாக இருக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எந்த அளவு பர  பரப்பு என்று.

 300 டாலர் விலையில் 120   இன்ச்சுகள் அளவு படம் திரையில் பார்க்கலாம். படுக்கையில் படுத்துக் கொண்டு கூரையை நோக்கி நிறுத்தி வைத்து விட்டு கூரையிலேயே படம் பார்க்கலாம். மீண்டும் சக்தி ஏற்றுக் கொள்ளக் கூடிய லிதியம் அயனி மின்கலம் கொண்டது. இதிலேயே ஒலி பெருக்கி உண்டு. அருமையான ஒலி தரம். படமும் நல்ல துல்லியம். கம்ப்யூட்டர் , ஐபோன், மற்றும் தொலைக் காட்சி பெட்டியுடன் இணைப்புக் கொடுத்து திரையில் காணலாம்

வரும் அக்டோபர் 22  அன்று சந்தைக்கு வரும் இதை  அமேசான் இணைய தளம் மூலமாக  பதிவு செய்து பெறலாம்

1 comments:

புதுமையான கண்டுபிடிப்புக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More