Latest News

தேடுபொறி ரகசியங்கள் : இது இ(ன்றை)ணைய உலகம் - 11

தேடுபொறி தேடலின் போது உங்கள் தளம் முதன்மையாக வரவேண்டுமா.?

இது ரொம்ப சுலபங்க,,

    ஒரு விசயம், ஒரே விசயம் அதை ஒவ்வொரு தடவையும் மறக்காம செஞ்சிங்கன போதும், உங்க தளம்தான் தேடுபொறியில் (Search Engine) முதல் இடத்தில இருக்கும்.

இ(ன்றை)ணைய உலகம் முதல் பாகத்திலிருந்தே இணைய உலகத்தில் உங்கள் இணையதளம் செயல்படும் விதத்தை பற்றி கூறி வருகிறேன்.  

    சென்ற பதிவுகளில் சொந்தமாக இணையதளத்தை துவங்குவதால் நாம் பெறும் நன்மைகள் பற்றி பார்த்தோம்.  இணைய தளத்தை வடிவமைத்த பிறகு அதை பிரபலபடுத்த சில யோசனைகள் உங்களுக்கு தேவைப்படும். அதில் முதன்மையானது கூகுள் போன்ற தேடுபொறிகளில் உங்கள் தளம் அடையாளம் காணப்பெற வேண்டியது தான்.


ஆம், பெரும்பாலும் உங்கள்  தளத்தின் மதிப்பை தேடுபொறிகள் (Search Engine) தான் தீர்மானிக்கின்றன.

      சாதாரணமாக இணையதளத்தை பிரபலபடுத்த பல வழிகள் இருந்தாலும், தேடுபொறிகளின் மூலம் வரும் ஒரு வாடிக்கையாளர் மிக முக்கியமானவர் ஆவர். காரணம் உங்கள் தளத்திற்கு மற்ற விளம்பரங்களின் மூலம் வரும் வருகையாளர்களை விட இத்தகைய தேடுபொறிகளின் மூலம் தேடி வருபவர்களுக்கு உங்கள் தளத்தின் சேவை எளிதாக உங்கள் விற்பனையை அதிகரிக்கச் செய்யும்.

ஆம், அவர்கள் உங்கள் தளத்தில் தங்கள் தேவை நிறைவடையக்கூடும் என்ற அடிப்படை எண்ணத்துடன் வரும் சரியான வாடிக்கையாளர்  (Hot Calls) ஆவார்.


இந்த பதிவில் நமது தளம் தேடுபொறியில் முதல் வரிசையில்  வருவதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
  1. பக்க தலைப்பை ( Page Tittle)  தேர்ந்தெடுக்கையில் கவனம் தேவை
  2. விளக்க குறிச்சொற்கள் ( Page Description ) பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
  3. பக்க முகவரியை ( Page URL ) சரியாக கொடுங்கள்
  4. தேவைப்படும் பங்கங்களுக்கான இணைப்பு ( Page Link ) வழங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
  5. தரமான வரிகளை ( Quality Content ) உள்ளீடு செய்யுங்கள்
  6. நங்கூர உரை ( Anchor Text ) கொடுக்கும் போது யோசியுங்கள்
       பொதுவாக,   தேடுபொறிக்கேற்றவாறு (Seo Expert)  தளத்தை உள்ளீடு செய்வதில் நீங்கள் கெட்டிக்காரராக இருந்தால் இதையே மற்ற வாடிக்கையாளர்களுக்கும் வேலையாக செய்து கொடுத்து இணையதளத்தில் வருமானம் செய்யவும் முடியும். எனவே தான் தேடுபொறி ரகசியங்களை முழுமையாக நீங்கள்  தெரிந்துகொள்வதும் நன்மைபயக்கும்

சிறு வேலைதான் என்றாலும் இணையத்தில் ஊடாடுவதில் வல்லவராக நீங்கள் இருந்தால் மட்டுமே இந்த பணியை உங்களால் சிறப்பாக செய்து வருமானமும் செய்ய முடியும். 

      இந்த தொடர் பதிவை முழுமையாக படித்து முடிக்கும் பொழுது ஒரு கணினி இணைப்பும், ஒரு இணையதள வசதியும் இருந்தால் நிச்சயமாக நீங்களும் ஒரு சுயதொழிலதிபராக வாய்ப்பு (SEO Submission Job) மிக பிரகாசமாக உங்கள் கண்ணில் தெரியும். மிகச்சிறந்த  தன்னம்பிக்கையையும், ஆலோசனையையும்  இந்த தொடர்பதிவு உங்களுக்கு வழங்கும்.  

மேற்குறிப்பிட்ட ஆறுவகையான தலைப்புகள் பற்றியும் கொஞ்சம் விளக்கமாக காண்போம்..

1. பக்க தலைப்பை ( Page Tittle)  தேர்ந்தெடுக்கையில் கவனம் தேவை

     உங்கள் வலைதளத்தில் பக்கங்களை உருவாக்கும் போது தனிப்பட்ட கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் தான் உங்கள் தளத்திற்கான முதல் வாடிக்கையாளன்.
  • பக்கத்தலைப்புகளுக்கு தனிப்பட்ட மற்றும் துல்லியமான வார்த்தைகளை தேர்ந்தெடுங்கள்
  • மொத்த பக்கத்தையும்  பார்வையாளர்களுக்கு புரிந்துகொள்ளும் விதத்திலாக உங்கள் பக்க தலைப்பு இருக்கட்டும்
  • சம்பந்தமே இல்லாத தலைப்பை  வைத்து பார்வையாளர்களைஅதிருப்தி அடைய வைக்காதீர்கள். இது தற்காலிகமாக உங்கள் பக்க வருகையை  அதிகரிக்குமேயன்றி நிரந்தரமாக உங்கள் தளத்தின் மேல் அவப்பெயரை ஏற்படுத்திவிடும்
  • கடனுக்கே என்று தலைப்பை வைத்துவிடாமல் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் சிறிது நேரத்தை செலவிடுங்கள். அது உங்கள் மொத்த உழைப்பிற்கும் பலனை கொடுக்கும்.
  • தொடர்பதிவுகளை எழுதும் போது ஒவ்வொரு பதிவிற்கும் தனிப்பட்ட தலைப்புகளையே கொடுங்கள்.  ( உதா. "பணம் பணம் பணம் -1, 2, .. 23" தொடர்பதிவில், விளம்பரம் செய்வது  செய்வது எப்படி..? என்ற தனி பதிவை மட்டும் விரும்பும் ஒரு வாசகர் திரும்பவும் அந்த பதிவை படிக்க விரும்பும் பட்சத்தில் தேடுவதில் சிரமம் உண்டாகும் அல்லவா? மாறாக, "விளம்பரம் செய்வது எப்படி?-பணம் பணம் பணம்-3" என்றவாறாக அமைப்பது நிரந்தர வாசகர்களை அதிகம் பெற்றுத்தரும். 
  • அதிக நீளமான தலைப்புகளை வைக்காதீர்கள். இதனை தேடுபொறிகள் ஏற்றுக்கொள்வது மிக கடினம்
  • 70க்கும் குறைவான எழுத்துகள் உள்ள தலைப்புகளையே கூகுள் போன்ற தேடுபொறிகள் விரைவாக ஏற்றுக்கொள்கின்றன என்பதை மறவாதீர்
2. விளக்க குறிசொற்கள் ( Page Description ) பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
  • தற்போதை பிளாக்கர்.காம் போன்ற தளங்களில் சர்ச் டெஸ்கிரிப்சன் ( Search Description ) என்ற புது வசதியை அவர்களே வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலமே விளக்க குறிச்சொற்களை வழங்குவதன் பயனை தெரிந்துகொள்ளலாம்.
  • விளக்க குறிசொற்கள் என்பது உங்கள் முழு பக்கத்தையும் இரண்டு வரிகளில் சொல்லி விடக்கூடிய குறுஞ்செய்திகள் ஆகும்
  • வாடிக்கையாளர்களுக்கு சிறு ஆலோசனையை உங்கள் குறுஞ்செய்தி சொல்ல கூடியதாக இருக்க வேண்டும்
  • "இந்த தளத்தில் நான் சொல்லவருவது என்னவென்றால்" என தேவையில்லாத வார்த்தைகளை (Don't use Common Words) கொடுக்காதீர்கள்.
  • சுருக்கமாகவும், தனிப்பட்ட வார்த்தைகளிலும் உங்கள் விளக்க குறுஞ்செய்தி இருக்கட்டும்


3. பக்க முகவரியை ( Page URL ) சரியாக கொடுங்கள் :
  • தேடுபொறிகள் ஊடுருவி தேடி எடுக்கும் போது முதலில் அடையாளம் கண்டுகொள்வது உங்கள் பக்க முகவரியைத் தான்.
  • பக்கமுகவரிகளில் எண்களை கொடுப்பதை தவிர்த்துகொள்ளுங்கள்
  • எளிதான பிரிவு ( Directory of folder ) வகைகளை அமைத்துக் கொள்ளுங்கள்/
  • உதா.  ( ww.shoppingtimes.com/search/product/electronics/watch/mens/gold/spertime/ ) இப்படி அதிக இணைப்புகளை உங்கள் இணைய தளம் உருவாக்கத்தில் அமைப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.
  • அதேசமயம், வாசிப்பவர்கள் விரும்பினால் நேரடியாக உங்கள் முகவரியின் ஒரு பாதியை நீக்கிவிட்டு பார்க்க கூடிய வகையிலும் இணைப்பின் முகவரியை அமைப்பது  சிறப்பு
  •  ww.shoppingtimes.com/search/product/electronics/watch/mens/gold/spertime/ என்ற இணைப்பில் வாசகர் திரும்ப தொடர்புடைய மத்த பொருட்களை பார்க்க விரும்பினால் /mens/gold/spertime/ என்பதை முகவரி பட்டையில் நீக்கிவிட்டு www.shoppingtimes.com/search/product/electronics/watch/  என்ற முகவரியில் மீதமுள்ள பிரிவுகளை பார்க்கும் படி பார்த்துகொள்ளுங்கள்
  • அடிக்கடி சில தளங்களுக்கு மட்டும், தேடுபொறிகளில் தேடும் போது 301 redirects, 404 page not found போன்ற செய்தி வருவதற்கு காரணமும் இது தான்
4. தேவைப்படும் பங்கங்களுக்கான இணைப்பு ( Page Link ) வழங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
  • வாடிக்கையாளர்கள், தொடர்புடைய மற்ற பக்கங்களை அடையாளம் கண்டு ஊடுருவ வசதியாக தொடர் இணைப்புகளை கொடுக்க மறவாதீர்
  • பெரும்பாலும்  பொத்தான்கள், படங்கள், டிராப்டெளன் மெனு போன்றவற்றை இணைப்பு தருவதற்கு பயன்படுத்தாதீர்கள். இதனால் தேடுபொறிகளின் பார்வைக்கு உங்கள் இணைப்பின் வரத்து இருக்காது போய்விடும்
  • எனவே எழுத்துகளால் உங்கள் இணைப்பு இருக்கட்டும்
5. தரமான வரிகளை ( Quality Content ) உள்ளீடு செய்யுங்கள்

     தேடுபொறியில் முதன்மை பெற வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான, தேவையான வரிகளை அமையுங்கள், அவை உண்மையானதாகவும், நல்ல செய்தியாகவும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த வேண்டும். அதிக நேரம் ஒரே பக்கத்தை வருகையாளர்கள் பார்க்கும் பட்சத்தில் தேடுபொறிகள் அந்த பக்கத்தை தகவமைத்து தக்கவைத்துக் கொள்ளும்
  • தரமான கருத்துள்ள செய்திகளை பகிருங்கள். பக்கத்தை எழுத்துகளால்  நிரப்பாதீர்கள், பொருள்பட பதியுங்கள்
  • வாசிக்க எளிதாக உள்ள சொற்களை பயன்படுத்துங்கள்
  • மற்ற தளங்களில் பிரதி எடுக்காதீர்கள். அதை வாசகர்களும், தேடுபொறிகளும் நிராகரித்துவிடுகின்றனர்
  • புது புது வார்த்தைகளை கற்றுக்கொண்டு அதை பயன்படுத்துங்கள்
  • வாசகர்களை பொருத்தே  தேடுபொறிகள் தகவல்களை திரட்டுகின்றன. எனவே உங்கள் பக்க வரிகள் வாசகர்களுக்காக எழுதுங்கள் தேடுபொறிகளுக்காக அல்ல
  • இலக்கண பிழை, எழுத்து பிழைகளை கவனமாக சோதியுங்கள்

seo 2.2


6. நங்கூர உரை ( Anchor Text ) கொடுக்கும் போது யோசியுங்கள்

      மேலே பக்கத்திற்கான இணைப்பு என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ள படி ஒரு இணைப்பை கொடுக்கும் போது பயன்படுத்தக்கூடிய சொற்களுக்கு நங்கூர உரை ( Anchor Text ) என்று பெயர்
  • ஒரு இணைப்பை கொடுக்க, சொடுக்கக் கூடிய வகையில் அமைக்ககூடிய வார்த்தை நங்கூர உரை ஆகும்
  •  < a href = "' www.youlink....................">நங்கூர உரை </a என்றவாறு மீயுரை நிரல் வழி அமைப்பீர்கள் அல்லவா..?   அதேதான்
  • மீயுரை அனுபவமில்லாத பயனர்கள் உங்கள் லின்ங்-ஐ சொடுக்கி இணைப்பு முகவரியை கொடுப்பீர்கள் அல்லவா.. ?( பார்க்க படம் 2.2)
  • அதிகம் இணைப்பு கொடுக்கும் போது எல்லோரும் உபயோகிக்கும் சாதாரன வார்த்தைகளை கொடுக்காதீர்கள் ( உதா. "சொடுக்கு (click here)" "பார்க்க" "பாகம்1" "இணைப்பு"  போன்ற வார்தைகளுக்கு பதிலாக தேவையான இணைப்பை குறித்த தகவலை வெளிப்படுத்தும் வார்த்தைகளை கொடுங்கள்.)
  • அதேசமயம் முழு பத்தியையோ அல்லது நீளமான சொற்றொடர்களையோ இணைப்பு கொடுக்க பயன்படுத்தாதீர்கள்

மேற்கண்ட ஆறு தகவல்களை திரும்ப திரும்ப படியுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் இதை படிக்கும் பொழுதும் புதிய விசயங்களை உங்களுக்கு கற்றுத்தரும்.
    இந்த முறைகளை  ஆரம்பத்தில் கையாளுவதற்கு சற்றே சிரமாகவும் சலிப்படையவும் செய்யலாம். ஆனால் நிச்சயமாக நெடுங்காலம் உங்கள் தளத்தை உங்கள் வியாபாரத்தை முதாலாம் இடத்தில் தக்கவைக்க சர்வ நிச்சயமாக உங்களுடன் இந்த வழிகள் துணை நிற்கும்.

Follow by Email

Recent Post