மொபைல் உலகம் : ஸ்மார்ட் போன் ( smart phone)


உங்கள் பையிலோ, கையிலோ சாதுவாய் அமர்ந்திருக்கும் இன்றைய மொபைல் போனுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் கவர்ச்சியுட்டிய கணினியை விட சக்தி அதிகம் . மொபைல் போன் பேசுவதற்கானது எனும் கருத்தாக்கம் தேய்ந்து முனை மழங்கி போய்விட்டது. இன்றைக்கோ சர்வமும் மொபைல் மயம். மனதில் நினைப்பதை மொபைல் மூலம் நிறைவேற்றி கொள்ளலாம் எனும் ஒரு காலத்தை நோக்கிய பயணத்தில் அசுர வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது மொபைல் உலகம்.

காகிதக் கட்டுகளை கணினிகள் அழித்துவிட்டது  அன்றைய காலம். இப்போது கணினிகளை செல்போன்களின் புதிய வடிவங்கள் விழுங்கி ஏப்பம் விடுகின்றன. ஒரு குட்டிக் கணினியை சமர்த்தாய் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கும் இத்தகைய மொபைல் போன்கள் ஸ்மார்ட் போன்கள் ( Smart Phone) எனச் செல்லமாய் கூப்பிடபடுகின்றன.

இன்டர்நெட் வசதியுடைய இத்தகைய ஸ்மார்ட் போன்கள் ஒரு சின்னக் கணினியாகவே இன்றைக்கும் பயன்பட்டு வருகின்றன . உதாரணமாக பிளாக் பெரி வந்தபிறகு அலுவலகங்கள் தங்களுடய மின்னஞ்சல் வசதிகளை கணினியிலிருந்து பிளாக் பெரிக்கு மாற்றின. மின்னஞ்சல் வசதிகளை தாண்டி கோப்புகள், பிபிடி-கள் போன்றவற்றை பிளாக் பெரிகளிலிருந்தே வாசிக்கவும், அனுப்பவுமான வசதிகளை பிளாக் பெரி தருகிறது.
ஒரு வகையில் இத்தகைய ஸ்மார்ட் போன்கள் பயன்பாடால் ஒரு அலுவலகத்தையே பாக்கெட்டில் சுமந்து செல்லும் உணர்வு இதில் உண்டு.
நன்றி மீண்டும் சந்திபோம்.

2 comments:

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More