சமூக வலை தளங்களுக்கு எளிதில் இணைப்பு கொடுங்கள்

    நமது தொழிற்களம் தளம் வடிவமைப்பை வாசிப்பவர்களுக்கு எளிதாகவும் பயன்படுத்துவதற்கு உதவியாகவும் இருக்கும் படி பல மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறது. முழுக்க வடிவமைப்பில் கவனம் இருந்தாலும் தொழிற்களம் குழுவை சேர்ந்த சக பதிவர்களை தொடர்பில் வைத்து அவர்களின் கருத்துகளையும் சேர்த்தே வடிவமைப்பில் மாற்றங்களை செய்து வருகிறோம்.

அதன்படி, சமூக வலைத்தளங்களில் தொழிற்களம் பதிவுகளை இணைப்பதற்கு மிக எளிய முறையில் இணைப்புகள் வழங்கியிருக்கிறோம். 

    நமது தொழிற்களம் குழு பதிவர்களும், தொழிற்களம் வாசிப்பவர்களும் தங்கள்  சமூக வலைப்பக்கங்களில், தொழிற்களத்தின் உங்களுக்கு பிடித்த பதிவுகளை பகிர்ந்து மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்

ஒவ்வொரு பதிவின் இறுதியில் உள்ள கூகிள்+, பேஸ்புக், டிவிட்டர் இணைப்பு பொத்தான்களை பயன்படுத்துங்கள்


  • முதலில் உங்கள் சமூக வலைத்தளங்களின் கணக்கை முடுக்கி விடுங்கள்
  • தொழிற்களம் பதிவுகளின் கீழ் உள்ள இணைப்பு பொத்தான்களை சொடுக்குங்கள்
  • உங்களுக்கு பிடித்த வரிகளை உள்ளீடு செய்து இணைப்பு கொடுங்கள்
  • இனி உங்கள் சமூக வலைத்தளத்தில் உங்கள் நண்பர்களும் தொழிற்களம் பதிவுகளை கண்டு வாசிப்பார்கள்
    தொழிற்களத்தில் தொடர்ந்து பயணியுங்கள்,, இனி வரும் நாட்களில் உங்களுக்கு மிகவும் பரிச்சையமான அனுபவ பதிவர்கள் தொழிற்களத்தினுடன் உங்களை சந்திக்க வருகிறார்கள். 

பதிவுலகிற்கு புதியவர்கள் உங்கள் ஆக்கங்களை, உங்களுக்கு தோன்றுவதை தயங்காமல் பகிருங்கள்.

தொழிற்களம், புதிய பதிவர்களை அதிக அளிவில் உருவாக்கிடவே விரும்புகிறது.  அதனால் தங்கள் கருத்துகளை தயங்காமல் பதிவிடுங்கள்.

ஒவ்வொரு பதிவை நீங்கள் பதியும் போதும் அதில் உள்ள தவறுகளை அப்போது தான் திருத்திக்கொள்ள வாய்ப்பு அமையும். மிகச்சிறந்த காவியங்களும் முதலில் ஒரு  எழுத்தை துவங்கித்தானே உருவாக்கப்படுகிறது?

உங்களுக்கான மேடை இது. இதில் தவறுகளை செய்யுங்கள். அப்போது தான் நல்ல படைப்புகளை உருவாக்க தெளிவு கிடைக்கும். ஒவ்வொரு பதிவை பதிந்ததும் அடுத்த பதிவை அதை விட நீங்கள் சிறப்பாக பதிகிறீர்கள். எந்த தயக்கமும் வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள். தொழிற்களம்  உங்கள் கைகளை இருக்கி பிடிக்காது உங்களை வழி நடத்தும்.


தொடர்ந்து பயனியுங்கள்.. 

1 comments:

அருமையான மாற்றம்.வரவேற்கிறேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More