சிந்தனையைத் தூண்டும் சிரிப்பு மன்னன் பீர்பால் கதைகள்...


சிந்தனையைத் தூண்டும் சிரிப்பு மன்னன் பீர்பால் கதைகள்...

சக்ரவர்த்திகளில் முதல்மையானவர் மாமன்னர் அக்பர் ஆவார். பாரத நாட்டை ஆண்ட முகலாய சக்கரவர்த்தி அக்பரின் அரசவையில் அமைச்சராக இருந்து நகைச்சுவையுடன் சிந்திக்க வைத்தவர் பீர்பாலாகும்.

                            

இவரது இயற்பெதர்  'மகேஷ் தாஸ்' என்பதாகும்.இவரது அறிவாற்றலின் திறன் கண்டு மக்களால் அளிக்கப்பட்ட பட்டம்தான் 'பீர்பால்' என்பதாகும். பிறவியில் ஏழையாக இருந்தாலும் தன் ஆற்றல் மிகு பேச்சால், மாமன்னர் அக்பருக்கு அடுத்த நிலையில் ஏற்ற மிகு வாழ்வு வாழ்ந்த மேதையாகும்.

இவரது அறிவுரைகள் நகைச்சவையுடன் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டு பவை ஆகும். விஜய நகர சாம்ராஜ்ய சக்ரவர்த்தி கருஷ்ண தேவராயர் அரசவையில் நகைச்சுவை மன்ன்னாகத் திகழ்ந்து பேரறிவாற்றலை வெளிப்படுத்திய தென்னாலி இராமன் போன்று. பாரத பேராசைக் கட்டிக்காத்து அரசாண்ட அக்பரின் அரசவையில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்தவர் பீர்பால் என்றால் மிகையாகாது.

                                     

அக்பரின் மனதில் மரியாதையும், மதிப்பும் பெற்றிருந்த பீர்பால் அவர்களை, பக்கள் ''ராஜா பீர்பால்'' என்று மிக மரியாதையுடன் அழைத்தனர். பீர்பாலின் இறுதி நாட்கள் வரை நகைச்சுவை மிளிர நற்கருத்துக்களைக் கூறியமையால் மாமன்னர் அக்பர் முதல் பாமர மக்கள் வரை பாராட்டிய புகழும் அளவுக்கு வரலாற்றில் சிறப்பைப் பெற்றார்.

அக்பரின் மிகவும் செல்வாக்குடன் விளங்கியுள்ளார் என்பதற்கு சிற்ப வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட ''ராஜா பீர்பால் மாளிகை''யே தக்க சான்றாகும்.

பீர்பாலின் நகைச்சுவைக் கருத்துக் குவியல்கள் மானிட நலிவாழ்விற்கு வழிகாட்டுவனவாகும். அவருடைய வளமிகு அறிவுரைகள் எல்லாம் கதைகள் வடிவில் எக்காலத்தும் நிலைத்து நகைச்சுவை மன்னன் பீர்பாலின் பெருமையை நிலைநிறுத்தும் என்பது உண்மை.  

நன்றி...

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...

2 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More