டெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது.


நோய் பரவும் முறை

Aedes எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப வலயங்களில் பெருகும். உதாரணமாக:வடக்கு ஆர்ஜென்டினா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஷ்ட ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கோடேமலா, குயான, ஹைடி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை. போன்ற நாடுகளில் பரவி வருகின்றன

நோயின் அறிகுறிகள்

 • நல்ல காய்ச்சல்
 • தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்)
 • கடும் தலைவலி
 • கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
 • வாந்தி
 • தோல் சிவத்தல் (rash)
 • வெள்ளை அணுக்கள், இரத்தவட்டுகள் குறைதல்
 • மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள் -- petechiae)[1]
 • அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்

தடுப்பு முறைகள்


 • கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளல், 
 • கொசு உருவாகாமல் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல் போன்றவை இந்நோயைத் தடுக்க உதவும்.

நன்றி : விக்கிபீடியா

 இது பற்றிய மேலும் பதிவுகளுக்கு :

நண்பர் எடக்கு மடக்கு தளத்தில் :

டெங்கு காய்ச்சல் அறிந்ததும் அறியாததும்..

நண்பர்  சி பி யின் தளத்தில் :

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க 10 வழிகள்

 தன்னம்பிக்கை  தளத்தில் :

டெங்கு காய்ச்சல்

காமகோடி . org

 டெங்கு காய்ச்சல் குணமாக

 

 

6 comments:

பலரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

இணைப்புகளுக்கு நன்றி...

அம்மாடியோ டெங்கு காய்ச்சல் அறிகுறிய கேட்டு ஒரே தொல்லை...எப்படியோ ராஜா சார் உங்க பதிவால நாங்களும் இலவச டெங்கு ஆலோசகரா ஆயிட்டோமில்ல...

தெரிந்து கொண்டேன் நன்றி...

தகவலுக்கு நன்றி:-)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More