"விசில்" அடிக்கத் தெரியுமா?

உங்களுக்கு "விசில்" அடிக்கத் தெரியுமா? தெரியாதா? தெரியாது என்றால் வருத்தப்பட வேண்டிய விஷயம் தான் அது!

ஆம், விசில் அடிக்கத் தெரியாதவர் என்றால், நீங்கள் சீக்கிரம் கற்றுக்கொள்ளுங்கள் விசில் அடிக்க! "என்னடா.. இந்தப் பொண்ணு, விசில் அடிக்கக் கத்துக்கச் சொல்லுது.."னு யோசிக்கிறீங்களா?

விசில் அடிப்பது நல்ல செயலாகக் கருதப்படுவதில்லை, சரிதானே? ஆனால், நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் அப்படிச் சொல்லமாட்டீர்கள்.

"சரி கண்மணி, விசில் அடிக்கறேன் நானும்..", இப்படித் தான் சொல்வீர்கள் இந்தப் பதிவை வாசித்து முடித்துவிட்டு! அதுக்கு நான் பொறுப்பு.

சரி,நேர விஷயத்துக்கு வருவோம். நான் சொல்லும் விசில் நீங்கள் நினைப்பது போல, உதட்டைக் குவித்து எழுப்பும் சத்தம் அல்ல! இருவிரல்களை வாயில் வைத்து செய்யும் வித்தையும் அல்ல! பிறகு, என்ன? இதோ சொல்கிறேன்.

விசில் அடிப்பது - "Whistle Blowing" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படி என்றால், நம்ம திரைப்படத்தில் வரும் கதாநாயகர்கள் போல இருப்பது.

புரியவில்லையா? அதாவது, நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உதாரணத்துக்கு ஒரு அச்சு நிறுவனம், அங்கு புத்தகங்கள் அச்சிடுகிறார்கள். அதைத் தவிர்த்து கள்ள ரூபாய்  நோட்டுக்களும் அச்சடிக்கிறார்கள், என்ன செய்வீர்கள்?

கண்டுகொள்ளாமல் இருப்பீர்களா? அப்படிக் கண்டுகொள்ளாமல் இருந்தால், உங்களுக்கு விசில்  அடிக்கத் தெரியாது என்று அர்த்தம். அதைப் பற்றி வெளியே மக்களுக்கோ, அல்லது அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தினீர்களேயானால், உங்களுக்கு விசில் அடிக்கத் தெரியும்.

இன்னுமொரு உதாரணம் சொல்கிறேன், ஒரு தொழிற்சாலையில்  வேலை செய்கிறீர்கள், அங்கு  பேருந்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. அது தரமானதாகத் தயாரிக்கப்படவில்லை என்று உங்களுக்குத் தெரிகிறது. இதனால், அந்த நிறுவனத்திற்கு நிறைய பணம் கிடைக்கிறது,அந்த பணத்தில் தொழிலாளர்களுக்கும் நல்ல சம்பளம் தருகிறார்கள் (உங்களுக்கும் சேர்த்து தான்) இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட வைப்பு இருக்கிறது, பேருந்து விபத்துக்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதை வெளியே சொல்வீர்களா மாட்டீர்களா?

சொன்னால், உங்களுக்கு வேலை போய்விடும். உடன் வேலை செய்பவர்கள் யாரும் இதைப் பெரிதாய் நினைக்கவில்லை. அவர் அவருக்கு சம்பளம் நிறையக் கிடைக்கிறது என்று நினைக்கிறார்கள்.

உங்களையும் இதை எல்லாம் கண்டுகொள்ளாதே என்கிறார்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்? இத்தனை தடைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் நீங்கள் வெளியே இந்த விஷயத்தை, அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துகிறீர்கள் என்றால், உண்மையாகவே நீங்கள் தான் ஹீரோ! உங்களுக்கு விசில் அடிக்க நன்றாகத் தெரியும் என்று அர்த்தம்.

விசில்  அடிப்பது சரி தான், ஆனால் எப்படி அடிக்க வேண்டும்? போதுமான அளவு ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்கக் கூடாது. போதுமான அளவு ஆதாரம் இருக்க வேண்டும்.

மேலும் சரியான நேரத்தில் அடிக்க வேண்டும். பெரிய விபத்தோ, அசம்பாவிதமோ நிகழும் முன் அதைத் தடுக்கும் வகையில் விசில் அடிக்க வேண்டும்.

என்ன, நீங்க இப்போ விசில் அடிக்கத் தயாரா? இனி விசில் அடிக்கிறது நல்ல விஷயம்னு சொல்வீங்க தானே?

சரி, சரி நான் இதோட கெளம்பறேன், எங்க வீட்டுக் குக்கர் விசில் அடிக்கிது, போய் அமத்தனும் அடுப்ப! :) :) :)

----

கண்மணி அன்போடு!

    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com


11 comments:

நல்லா,, சத்தம் போட்டு அடிச்சிட்டா போச்சு...

:) அடிங்க அடிங்க

கோரஸா அடிச்சுருவோம்

ஓ இப்படி வேற இருக்கா

நல்ல ஆராய்ச்சி பதிவு! :) :)

சீனுவுக்கு மட்டும் தெரிந்தால் உடனடியாக மனப்பாடம் செய்துகொள்வான், நான் மட்டும் சும்மாவா இருப்பேன் நானும் மனப்பாடம் செய்துகொண்டுதான் இருக்கிறேன்!

by the way, எடுத்துக்கொண்ட கருத்தை சொன்ன விதம் அழகு! keep rocking!

"Whistle Blowing"
இதற்கு இப்படி கூட அர்த்தம் இருக்கா ?
சில இடங்களில் தனியாக விசிலடிப்பது நமக்கு ஆபத்தாக கூட அமையலாம்.......
அப்படிப்பட்ட இடங்களில் கூட்டமாக சேர்ந்து தண்டோரா போடலாம். :)

@kathir rath ம்ம்.. நல்லா அடியுங்க... :)

@Prem Kumar S ஆமா.. இப்படியும் இருக்கு :)

@ வரலாற்றுச் சுவடுகள்: மிக்க நன்றி :)
ஆராய்ச்சிப் பதிவா? என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலயே..? :)

@ விஜயன்: ம்ம்ம் தண்டோராவோ விசிலோ நினைப்பது நடந்தால் சரி தான். :)

ரசிக்கவைத்த பகிர்வு...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More