தொழில் எவ்வாறு தொடங்கப்பட்டது ?


இனிய உறவுகளுக்கு  உங்களோடு வாழ்விற்கு தேவையான பல விசயங்களை பகிர்ந்துகொள்ள தொழிற்களம் ஒரு இணைப்பு பாலமாக நமக்குள் இருப்பதை நினைத்து மகிழ்வுடன் பயணிக்கிறேன் .

தொழில் என்று சொல்லுகிறார்களே அப்படி என்றால் என்ன ? என்று என்றாவது உங்களை கேட்டு இருக்கிறீர்களா ? இல்லை எனில் இப்போது கேளுங்கள் அதற்கான பதிலை சொல்லுகிறேன் .

தொழில் என்பது மனிதன் தன் தேவைக்காக செய்யும் வேலை .அந்த வேலை அவனின் உடலை மட்டும்  கொண்டது இல்லை அது மனதளவிலும், மூளையை பயன்படுத்தியும் செய்யப்படுகிறது .

ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு தேவைகள் குறைவாக இருந்தது.

இருக்க இடம் ,உடுத்த உடை , உண்ண  உணவு இதிலே அவன் நிறைவு பெற்று

இருந்தான் .

இடம் :

இடம் என்பது காட்டு வெளியில் மரத்தின் அடியில் அவன் இருப்பிடத்தை முதலில் அமைத்தான் .அதன் பின் கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தன்னை  காத்து கொள்ள அவன் முதல் முதலில் வேலையை ஆரம்மிக்கிறான் .தன உடம்பை வருத்தி பாறைகளை  குடைந்து தனக்கென பாதுகாப்பான ஒரு  இருப்பிடத்தை  உருவாக்குகிறான் .

உடை :

இயற்கை சூழலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள இலைகளை ஆடையாக அணிய ஆரம்மித்த மனிதன் அதன் பரிணாமத்தின் வளர்ச்சியாக கோரை  புல்களை கொண்டு ஆடை தயாரித்தான்  இன்னும் கெட்டியாக குளிர் தாங்கும் அளவிற்கு ஒரு ஆடையை உருவாக்க அவன் மூளை சிந்திக்க ஆரம்மித்ததன் விளைவு விலங்குகளை கொன்று அவற்றின் தோலை  ஆடையாக உடுத்த ஆரம்மித்தான் . இங்கிருந்து தான் மனிதனுக்குள்  ஆரம்மித்திருக்கும் போல் தனக்கு வேண்டும் என்றால் எதையும் கொல்ல துணிகிறான் .

உணவு :


பசியின் கோரத்தில் பார்க்கும் இலை தலைகளை உண்ண  ஆரம்மிக்கிறான் அதன் பின் மரங்களில் இருக்கும் காய் , பழம் என்று உன்ன ஆரம்மித்தவன் , பருவ மாற்றங்களில் பழம் உருவாகாத நாட்களில் விலங்குகளை வேட்டை ஆட முயலுகிறான் .

இந்த செயல்கள் அனைத்தும் அவனுக்கான வேலை என்று தொடக்கி கால போக்கில் அவனை சார்ந்தவர்களுக்கு என்றும் உழைக்கிறான் இந்த உழைப்புதான் தொழில் .இதை பற்றி இன்னும் அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாக பார்க்கலாம் .

-கோவை மு சரளா 14 comments:

முதல் பதிவை மிக பிரம்மாதமாக துவங்கியிருக்கின்றீர்கள் கோவை சகோதரி,,,

தொடர்ந்து தொழிற்களத்தில் கலக்குங்க...

வாழ்த்துகள்!!

நல்ல தொடக்கம்... வாழ்த்துக்கள்...

இந்த மதுர கவி அண்ணா எங்க போனாரு..?

முதல் பதிவே முத்தாய் , வாழ்த்துக்கள் சகோதரி...

அருமை... அடிப்படையிலிருந்தே தொடங்கியிருக்கிறீர்கள்..!

தொடர் சிறக்க வாழ்த்துகள்...!

பதிவு ஆழ்ந்த சிந்தனைக்கு ஈட்டுச் செல்வதை உணர முடிகிறது. தொடர வாழ்த்துக்கள்

வாங்க பழகலாம்...? களத்தின் சார்பில் அக்காவுக்கு வணக்கமுங்க. கதைக்க களம் இருக்கு வாங்க பழகலாம்...! ( மூளையை சலவைக்கு போட்டு இருக்கோமுல்ல வாங்கிட்டுதானே வரனும்,அதுக்குள்ள காணோம்முன்னா எப்படி
-கைப்புள்ள.)ஆமா அப்பவே ஆரம்பிச்சிட்(டி)டாங்களா தொழில,நான் களமோன்னு பார்த்தேன்.ஹி...ஹி...

நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன் ,செழியன் ,தமிழ்ராஜா கே,மதுரகவி ஆகியோருக்கு என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் உங்களின் தொடர்ந்த கருத்துகளில் மட்டுமே என் எழுத்து வளரும் ஆகவே தொடர்ந்து கருத்துடன் வாங்க ....

This comment has been removed by the author.


ஆதியிலிருந்து தொடக்கம்
ம்ம்ம் .....
எதையும் அதன் முளையில் இருந்து தொடங்குவது என்பது
உங்களுக்கே உரித்த அழகிய தன்மை கவிதாயினி

நல்ல தொடக்கம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத முயற்சிக்கவும்... 4 வரிகளில் அடங்ககூடியதில்லை இத்தலைப்பு...
இன்னும் எதிர்பார்க்கிறோம்....

சங்கவியின் கருத்துடன் உடன்படுகிறேன். வரும் தொடர்ச்சி அதை நிறைவு செய்யும் என எண்ணுவதால் தொடரும் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சரளா

கட்டுரை நல்லா இருக்குங்க ...தொடர்ந்து நிறைய எழுதுங்க . வாழ்த்துக்கள் !

அருமையான கட்டுரை.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More