இழந்தவற்றை மீட்போம். . . .

இழந்தவற்றை மீட்போம்.....


இழந்தவற்றை மீட்போம். . . .
மரங்களை வெட்டினோம்...
சுவாசிக்க நல்ல காற்றை இழந்தோம்;
காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டினோம்...
மழையை இழந்தோம்; மின்சாரமின்றி தவிக்கிறோம்;
விளை நிலங்களை வீடாக்கினோம்...
வீட்டை சுற்றி சிமிண்ட் தளம் அமைத்தோம்...
நிலத்தடி நீரை சேமிக்க மறந்தோம்...
இல்லாத நீரைத் தேடி பூமியை துளைக்கிறோம்...
துளைத்தது பூமியை மட்டுமா?
சொகுசான வாழ்க்கை வேண்டி
ஓசோனில் ஓட்டை போட்டோம்...
குளத்தையும் ஏரியையும் கூறுபோட்டோம்; இன்று
குடிநீருக்கு விலை கொடுக்கிறோம்- மொத்தத்தில்
இயற்கையை மறந்தோம்; செயற்கையாய் வாழ்கிறோம்.

வெளியில் தேடிய மாற்றம் வீட்டிற்குள்ளும் நுழைந்தது.
மின்சார; மின்னணு சாதனங்களைத் தேடினோம்...
உடல் உழைபை மறந்தோம் -அதனால்
மாதம் தவறாமல் மருத்துவரைத் தேடுகிறோம்...
கூட்டுக் குடும்பங்களை பிரிந்தோம்; குடும்ப உறவுகளை இழந்தோம்...
தாத்தாவும், பாட்டியும் சுமையானதால்
முதியோர் இல்லங்களில் அடைக்கலமாயினர்.
அத்தையும், மாமாவும், சித்தியும், சித்தப்பாவும்

ஆன்டியும், அங்கிளும் ஆயினர்.
நாமிருவர் நமக்கொருவர் என்றானபின்
அவர்களும் இல்லாமல் போயினர்.
பாசத்தையும் பந்தத்தையும் இழந்தோம்.

குருவே தெய்வம் என்பதை மறந்தோம்
வாழ்க்கை கல்வி ஏட்டுக்கல்வியானது
கற்றலும் கற்பித்தலும் கடமைகளாயின- ஆக
கல்வி கடை சரக்கானது.


இப்போதாவது நாம் மறந்தவற்றை நினைவூட்டுவோம்
மரங்களை நடுவோம்; மழை பெறுவோம்
காகத்தையும் சிட்டுகுருவியையும்
கண்காட்சியில் பார்க்கும் காலம் வருமுன்
இயற்கையை காப்போம்; இழந்தவற்றை மீட்போம்
உணர்வுகளை மதிப்போம்; உறவுகளை போற்றுவோம்.

அன்புடன்
 
நாஞ்சில் மதி

2 comments:

...ம்... எல்லாம் நடக்க வேண்டும்...

நன்றி...

மரங்களை நடுவோம் இயற்கையை பாதுகாப்போம்.அழகான கவிதை வரிகள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More