Latest News

இப்படியும் ஒருவரா.....

இப்படியும் ஒருவரா. . .


    தனது மனைவிக்குச் சொந்தமான பண்ணையில் தகரக் கூரை வேயப்பட்ட எளிமையான வீட்டில் வசித்து வருகிறார். கோரைப்புற்கள் முளைத்துள்ள பண்ணையில் ஊனமுற்ற நாய்கள் திரிந்து கொண்டிருக்க, ஒழுகும் கேனில் தண்ணீர் பிடித்து செடிகளுக்கு ஊற்றுகிறார். இவரது மாத சம்பளம் ஆறு லட்சம் ரூபாய். ஆனால் இவர் அதில் 90 % பணத்தை அறக்கட்டளைக்குக் கொடுத்து விடுகிறார். இதுபற்றி இவரிடம் கேட்டால், ''என்னிடம் உள்ளதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்கிறேன். நிறைய சொத்துக்கள் இருந்தால் அதை காப்பாற்ற அடிமை போல வாழ வேண்டியுள்ளது. என்னிடம் உள்ளதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்கிறேன்'' என்று உள்ளதைக் கூறுகிறார்.


இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா என்று வியப்பாக இருக்கிறதா? இவர் ஒரு நாட்டின் அதிபர் என அறியும் போது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம், தென் அமெரிக்க நாடான உருகுவே அதிபர் ஜோஸ் முஜிகா தான் இந்த அதிசய மனிதர். 2009ஆம் ஆண்டுமுதல் அதிபராக இருக்கும் முஜிகா அதற்கான மாளிகையில் இதுவரை தங்கவில்லை. முன்பு பயன்படுத்திய பழைய காரைத்தான் இப்போதும் பயன்படுத்துகிறார்.

இந்த செய்தியைப் படிக்கும் போது நமது நாட்டில் லோக்கல் கவுன்சிலர் முதல் உயர் பதவியில் இருப்பவர் வரை, பதவியில் இருப்பவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் செய்யும் ஆடம்பரச் செலவுகளும், அதிகாரமும் தான் நினைவிற்கு வருகிறது. ஏழைஅதிபர் முஜிகாவுக்கு ஒரு சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது.

அன்புடன்
நாஞ்சில் மதி


Follow by Email

Recent Post