விண்ணப்பிக்கும் நேரமிது. . .


           விண்ணப்பிக்கும் நேரமிது

    வீட்டில்+2 படிக்கும் பையனோ, பெண்ணோ இருக்கும் பெற்றோர்களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு,மே மாதம் தேர்வு முடிவு, அதனைத் தொடர்ந்து கட் ஆப் மார்க், கவுன்சிலிங், பிடித்த கல்லூரியில் சேர்க்கை என இனி வரும் ஒன்பது மாதங்களும் தேடுதல் படலம் தான். எவ்வளவு மதிப்பெண் எடுப்பார்களோ,எந்த கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவு கிடைக்குமோ, எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டியது வருமோ என மனதில் எழும் கேள்விகள் தான் எத்தனை எத்தனை. சென்ற ஆண்டு வரை உறவினர் வீட்டில்,நண்பர்கள் வீட்டில், பக்கத்து வீட்டில் என என்னைச் சுற்றி நிகழ்ந்த இந்த தேடுதல் படலம் தற்போது எங்கள் வீட்டிலும் நுழைந்து விட்டது. +2 படிக்கும் எனது மகனுக்காக நானும் இந்த தேடுதல் வேட்டையைத் துவக்கி விட்டேன். என்னைப் போல் தேடுபவர்களுக்குப் பயன்படலாம் என்ற எண்ணத்தில் நான் பார்த்த மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை இங்கு பதிவு செய்கிறேன்.

1. ஐ..டி (I.I.T), என்.,டி (N.I.T) போன்ற நாட்டின் சிறந்த தொழிற்கல்வி நிறுவனங்களில் இளநிலை இஞ்சினியரிங் மாணவர் சேர்க்கைக்கான ஜே..., -மெயின் ( JEE-MAIN) தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

தகுதி:
1. இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களோடு +2 தேர்ச்சி.

2. 2011-2012ல் +2 தேர்ச்சி பெற்றவர்கள், தற்போது +2 படிப்பவர்கள்.

தேர்வு நாள்
ப்லைன்: 2013 ஏப்ரல் 7ம் தேதி.
ஆன்லைன்; 2013 ஏப்ரல் 8முதல் 25ம் தேதி வரை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 15ம் தேதி.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.1800 (பொதுப்பிரிவினர்)

ரூ.900 (எஸ்.டி/ எஸ்.சி பிரிவினர்).

மேலும் விவரங்களுக்கு:


மாதிரித் தேர்வு:

இத்தேர்வுக்கான மாதிரித் தேர்வை தினமலர் - பிரில்லியண்ட் டுட்டோரியல்ஸ் இணைந்து திருப்பூரில் 2.12.2013 அன்று பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் நடத்துகிறது.

தொடர்புக்கு: 93630 77799, 90430 77799
----------------------------------------------------------------------------------------

2. நிப்ட் எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

தகுதி:
+2 வகுப்பில் கணிதம், இயற்பியல் , வேதியியல் பாடங்களுடன் தேர்ச்சி.

தேர்வு நாள்: 10-02-2013

விண்ணப்பக்கட்டணம்:
ரூ.1100 (பொதுப்பிரிவு, ஓபிசி)

ரூ.550 (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.1.2013
மேலும் விவரங்களுக்கு:
www.nift.ac.in

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

3. மருத்துவம் சார்ந்த சான்றிதழ், பட்டயப் படிப்புகள்.

விண்ணப்பக்கட்டணம்; ரூ.200

தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.11.2012

மேலும் விவரங்களுக்கு:

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
நாஞ்சில் மதி

2 comments:

பயனுள்ள பதிவுக்கு நன்றி....

பயனுள்ள தகவல்களுக்கு நன்றிகள் பல...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More