கூகுளின் தானாகவே ஓடும் கார்!

 google self driving car road test

 பிரபல தேடு பொறியாக இருந்து இன்டர்நெட்டில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள் புதிய தொழில் நுட்பத்துடன் பொருட்கள் , கருவிகள் தயாரிப்பு ஆய்வுகளிலும்  ஈடுபட்டுள்ளது. அந்த ஆய்வுகளில் ஒன்றுதான் தன்னைத் தானே செலுத்திக் கொள்ளும் கார்.

நிஜமாகவே இப்படி கார் தன்னைத் தானே ஓட்டிக் கொள்ளுமா என்று பார்க்க இதில் பயணம் செய்த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் ஹென்றி பௌண்டன் இது உண்மைதான் இந்தக் காருக்கு தான் செல்லும் வழி நன்றாகவே தெரிகிறது என்கிறார்.

இது போன்ற காருக்கு உயர் தொழில் நுட்பம் அவசியம். காரின் மேல்   அக சிவப்பு லேசர்கள் கொண்ட அமைப்பு எல்லா  திசைகளிலும் அளவுகள் எடுத்து
ராடாருடனும் காமேராக்களுடனும் இணைந்து கூகுளின் ஒரு இயங்கும் வரைபடத்தை காரில் உள்ள கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கிறது. கார் நகர நகர சுற்றுப்புறத்துக்கு தகுந்த படி வரை படம் மாறிக் கொண்டே இருக்கும் இதன் மூலம் பல்வேறு வகையான வாகனங்கள்,  உருவங்கள் , மனிதர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு கார் நகருகிறது. நாற் சந்திகளில் பிற வாகனங்களை நன்கு பார்த்து இது சரளமாக ஓடுகிறது. கடக்கும் பாத சாரிகளை கவனித்து நின்று செல்கிறது.

google self driving car systems


இந்த காரை யாராவது  ஓட்டியும் செல்லலாம் .இந்தக் காரை கட்டுபாட்டு தொகுதி தான் இயக்குகிறது .முன் பகுதியில் வைக்கப் பட்டு பொத்தானை அழுத்தியவுடன் தானியங்கி காராக மாறி ஓட ஆரம்பிக்கும். 

இன்னும் ஆய்வில் இருக்கும் இந்தக் கார் வணிக ரீதியாக இன்னும் வரவில்லை. 2 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More