இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.





இந்த திபாவளிக்கு சந்தையில் பல புதிய வெடிகளை அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளேன். கிழே உள்ளவற்றில் எது பிடித்துள்ளது என சொல்லுங்கள் அதை உங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறேன்.


1.         பிரபுதேவா வெடி.

இந்த வெடிக்கு இரண்டு பக்கமும் இரு வெடி வைக்கவேண்டும். ஓன்று பழய வெடி, மற்றொன்று புது வெடி. ஆனால் எது கூட சேர்ந்து வெடிக்கும் என யாருக்கும் தெரியாது.

2.      சிபி வெடி :

இந்த வெடிக்கு மேல எதாவது கவர்ச்சி படம் ஒட்டுனாதான் வெடிக்கும்.

3.      விக்கி வெடி:

இந்த வெடியை விடியோக்கு பக்கத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.

4.      விஜய்காந்த் ராக்கெட்:

குவாட்டர் பாட்டில் உள்ளே வைத்துதான் விட வேண்டும். விடும் முன்பு அதன் தலையில் நன்றாக தட்ட வேண்டும்

5.      அஜித் வெடி:

பற்ற வைத்த பின் அரை கிலோ மீட்டர் நடத்து போய்தான் வெடிக்கும்.

6.      அழகிரி வெடி :

இது வெடிக்கும் மும்பு பயங்கர சத்தம் வரும், ஆனா பத்தவைத்தால் புஷ்னு போய்டும்.

7.       2G வெடி

இது எப்ப வெடிக்கும், எப்படி வெடிக்கும், வெடிக்குமானு தெரியாம ஒரே சஸ்பென்சா இருக்கும்.

8.      விஜய் வெடி

பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்)

9.      பண்னிகுட்டி அனுகுண்டு :

வெடிக்கும் போது பயடேட்டா சொல்லிகிட்டே வெடிக்கும். ஒரு மலையை(நான் மலைனு சொன்னது தமிழ் மணம்னு நிங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல) கூட சரித்துவிடும்.

10.     கருணாநிதி வெடி

இந்த வெடியை குடும்பத்துடன்  மட்டும்தான் கொலுத்த வேண்டும். வெடி சத்தம் கூட அந்த அந்த குடுப்பத்திற்க்கு மட்டும்தான் கேட்கும்.



டிஸ்கி ; இது போல உங்களிடம் எதாவது வெடி இருந்தால் சொல்லுங்கள்,
   எங்கள் கம்பெனி வாங்கிகொள்ளும்.




3 comments:

என்ன ராசா இப்படிகேட்டுடிங்க...? எங்க அண்ணன் நித்தியோட,கதவை திறக்கும் போதெல்லாம் காத்துவரமாதிரி ஆனந்தமா வெடிக்கிற விதவிதமான வெடியெல்லாம் இருக்கு...? வாங்க வாங்கி வெடிச்சி பழகலாம்.

கலக்கல் வெடிகள்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரரே ....

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More