Latest News

வெள்ளத்தில் மிதக்கும் சூரிய மின் படகுப் பள்ளிகள்!

வெள்ளம் என்பது எப்போதாவது வந்தால் பரவாயில்லை பங்களாதேஷ் போன்ற நாடுகளில் எல்லா வருடமும் இது வாடிக்கை ஆகி விட்டது அந்த நேரங்களில் எப்படி பள்ளி நடத்துவது, பள்ளிக்கு செல்வது?

இதை மனதில் வைத்தே  சிதுளை ஸ்வநிர்வார் சங்க்ஸ்த்தா  என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிறுவனம் வெள்ளம் பள்ளிகளை சூழ்ந்து கொள்ளும்போது ஒரு முப்பது மாணவர்கள் அமரும் படியான சூரிய மின் படகை பயன் படுத்த ஆரம்பித்தது.இதிலேயே பாடங்கள் நடக்கும்.வருடத்தில் ஏறக்குறைய வருடத்தில் நாலு மாதம் இந்த வெள்ளம் சூழ்ந்த நிலை இருப்பதால் பள்ளி வருவதற்கு மாணவர்களும் தயாராக இருக்க வேண்டுமே இதனால் இந்த மிதக்கும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்ல சூரிய மின் ஒளி லாந்தர்கள் வழங்கப்படுகின்றன . இவை வறுமை காரணமாக மின் ஒளி இல்லாத வீடுகளிலும்  படிக்க உதவும்.

Solar-powered boat school, Bangladesh



பள்ளி முடிந்த மாலை வேளைகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விவசாயம், பொருளாதாரம், உடல் நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன இந்தப் படகுகள் உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து உருவாக்கப் பட்டு கூரை மேல் சூரிய மின் பலகைகள் பொருத்தப் பட்டு மின் ஒளி பெறுகின்றன. ஒவ்வொரு படகிலும் மடிக் கணினியும் இண்டர்நெட்டும் உண்டு. இவற்றில் நான்காவது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உண்டான கல்வி வசதிகள் செய்யப் பட்டுள்ளன

Solar-powered boat school, Bangladesh

உயர் பசுமை  தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி அடாத மழையிலும் விடாது பாடம் நடத்தும் இவர்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது

Follow by Email

Recent Post