பார்வை அற்றோருக்கு பார்வை தரும் சூரிய மின் விழி!

 

 
சூரிய மின் சக்தியின் பயன் பாடுகள் பலப் பல. இப்போது அது பார்வை  இழந்தோர் மீண்டும் பார்வை பெறவும் அது உதவக் கூடும். உள் நடப்படும் விழி லென்சுகள் மற்றும் விழிப் பகுதிகள் பார்வையற்றோருக்கு மீண்டும் பார்வையைத் திருப்பக் கூடியவை. ஆனால் ஒரே ஒரு சிக்கல். இவற்றுக்கு மின் சக்தி தர கம்பி இணைப்பு வேண்டியிருக்கும். ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பாலங்கர் ஆய்வகக் குழு உருவாக்கியிருக்கும் ஒளி டயோடு(photo diode)  என்கிற சூரிய மின் கலன்கள்(solar cells) கம்பிகளின் தேவையை அகற்றி மின் சக்தி பெரும் வழியை எளிதாக்கி உள்ளது.

 இந்த விழி பொருத்தப் பட்டவர்கள் வீடியோ கேமரா உள்ள கண்ணாடியை போட்டுக் கொள்ள வேண்டியதுதான். இந்தக் கேமரா விழும் ஒளியை அக சிகப்புக் கதிராக மாற்றி உள்ளே அனுப்பும் . பொருத்தப் பட்ட விழியுடன் இணைந்துள்ள சூரிய மின் கலன் அதை மின் சக்தியாக மாற்றி நரம்புகளை தூண்டி தகவல் மூளைக்கு அனுப்பப் படும். இதனால் பார்க்கிற உருவம்,  காட்சி என்ன என்று மூளை தெரிவிக்கும். பார்வையற்றவர்கள் இப்போது பார்க்க முடியும்.

அற்புதமான சூரிய மின் சக்தியின் பயன் பாடுகளில் இதுவும் ஒன்று.  சூரியனே வருக! ஒளி தருக. விழி தருக!

4 comments:

நடை முறைக்கு வந்தால் மகிழ்ச்சி தான் , பகிர்விற்கு நன்றி

Nadaimurakku kondu varathaane ariviyal muyarchigal kandupidippugal ellaam. urudiyaaga nambuvom

நல்லதொரு தகவலுக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More