காரை ஒளி ஊடுருவதாகச் செய்யும் மாயக் கண்ணாடித் தொழில் நுட்பம்!

 Optical Camouflage Technology

 
படத்தில் இருக்கும் இந்தக் காருக்குள் அதன் பின் புறம் அப்படியே தெரிகிறது. ஒளி ஊடுருவலா? இல்லை. அப்படித் தோன்றும் படி காரின் பின்  புறத்தில் அமைக்கப் பட்டுள்ள கேமரா எடுக்கும் படங்கள் வீடியோவாக காரில் இருக்கும் கண்ணாடித் திரையில் காண்பிக்கப் படுகின்றன. எடுக்கப் பட்ட படம் கணினியில் நிஜத் தோற்ற அளவுக்கு சீர் செய்யப் படுகிறது. இதனால் பார்க்கத் தத்ரூபமாக பின் புறம் ஒளி ஊடுருவி காரில் இருந்து பார்ப்பது போல் ஒரு கண்கட்டு வித்தையாக   மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. திரையாகச் செயல் படும் கண்ணாடி ஒரு சிறப்புப் பொருளால் உருவாக்கப் பட்டிருக்கிறது இந்த தொழில் நுட்பத்தை மாயக் கண்ணாடித்  தொழில் நுட்பம்(optical camouflage technology) என்கிறார்கள்.

இதை உருவாக்கியது ஜப்பானின் கெயோ பல்கலைக் கழகம்.

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More