மூக்கு செல் பொருத்தினால் முட நாயும் நடக்கும்!

 

 
அறிவியலில் முடியாது என்பதே இல்லை என்பது போல  பல பல புது கண்டு பிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. காதுக்குள் உள் பொருத்தப்  பட்ட நத்தை எலும்பால் காது கேட்டவர்கள், செயற்கை விழி பொருத்தி முதல் முதல் பார்த்த பெண் மணி இத்யாதி இத்யாதி என்று அறிவியல் கண்டுபிடிப்புகளின் பலன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.   சின்ன அம்மையை ஒழித்தது அறிவியலின் சாதனை.  ஆனால் சில பிரச்னைகளுக்கு இன்னும் உரிய தீர்வு இன்னும் முறையாக உருவாகவில்லை. உதாரணமாக முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை இல்லாமல் அவதிப் படுவது இருந்து வருகிறது.இப்போது முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு நடக்க முடியாத நாய்கள் மூக்கின் உள் உள்ள மோப்ப செல்களை எடுத்து ஆய்வுக் கூடத்தில்  வளர்த்தப் பட்டன. பின் அவை  தண்டு வடத்தின் சிதைவடைந்த பகுதி மீது பொருத்தப் பட்டன. என்ன ஆச்சர்யம்! நடக்க முடியாத நாய்கள் இப்போது கொஞ்சம் மெதுவாக அசைந்து நடப்பதை பார்க்க முடிந்தது.

 


இது முதுகெலும்பு பாதித்து நடக்க முடியாமல் இருக்கும் மனிதர்களுக்கு ஒரு முழுத் தீர்வு இல்லை என்றாலும் இவ்வளவு வருடங்கள் கழித்து ஒரு சிறிய முன்னேற்றமாக வந்துள்ளது வரவேற்புக்குரியது. மேலும் ஆய்வுகளுக்குப் பின் ஒரு நல்ல முழுத் தீர்வு நமக்குக் கிடைக்கலாம் 

4 comments:

புதுமையான தகவல்களுக்கு நன்றி....

அட இப்படியும் செய்யலாமா.. தகவலுக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More