காய்கறி, பழங்களை நீண்ட நாள் கெடாமல் காக்கும் மசாலா பேப்பர்!

 

 
உலகில்  25 சதம் உணவுப் பொருட்கள் கெடுவதால் சேதாரம் ஆகின்றன. இதைத் தவிர்த்து காய் கறி , பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை வழக்கத்தை விட 2 முதல் 4 மடங்கு வரை கெடாமல் பாது காக்கும் காகிதம் தயாரிக்கப் பட்டுள்ளது. மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் கலந்து இதை உருவாக்கியவர் அமெரிக்காவில் இருக்கும் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த கவிதா சுக்லா. இதில் வெந்தயமும் இருப்பதால் தன் நிறுவனப் பெயரையும் fenugreen   என்றே வைத்துள்ளார் இது இவருடைய பாட்டி இவருக்கு தயாரித்துக் கொடுத்து வந்த மசாலா, மூலிகைகள் மற்றும்  தாவரப் பொருட்கள் கலந்த ஆரோக்ய பானம்தான் இவருடைய தயாரிப்புக்கான வழி காட்டி.

இந்த புதிய காகிதம்(fresh paper) என்றழைக்கப் படும் சிறப்புக் காகிதம் இழுப்பறைகள், பைகள் , மூடு கொள்கலம் ஆகியற்றில் உணவுப் பொருட்களை இந்தக் காகிதத்தின் மீது வைத்து விட்டால் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

Spice impregnated paper keeps fruits and veggies fresh for longer
இந்தக் காகிதங்களை  மக்கச் செய்து மறு சுழற்சி மூலம் மறுபடி காகிதம் தயாரித்து கொள்ளலாம்.

8 காகிதங்களின் விலை 5 டாலர் . சிறந்த வடிவமைப்புக்கான பரிசு பெற்று சர்வதேச அளவில் பிரபலம் அடைந்துள்ளது இந்த புதிய காகிதம். ஒரு காகிதத்தின் விலை ஏறக் குறைய 50 ரூபாய் ஆகிறது. மூன்று வாரம் இதைப் பயன் படுத்தலாம் என்பதால் விலை அதிகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

2 comments:

விலை அதிகம் தான்...

நன்றி...

Oru vaarak kanakkaip paarungal oru vaarathirkku 17 rupees

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More