Latest News

காற்று அடிக்காத பன்க்சர் ஆகாத டயர்!



 Britek Airless Tires

வாகன டயர்களில் காற்று இருந்தால் தான் சக்கரம் சுழன்று வண்டி ஓடும். படத்தில் உள்ள டயர்களுக்கு காற்று அடிக்கத் தேவை இல்லை .பங்க்சர் எப்படி? டயர் பன்க்சரும்  ஆகாது. இப்போதைய தயாரிப்பாளர்கள் பொருட்களை நீடித்த உழைப்புடன் தயாரிப்பதில்லை. அப்படித் தயாரித்தால் ஒரே பொருளை வைத்துக் கொண்டு குஷாலாக பயன் படுத்திக் கொண்டு இருப்பார்கள். புதுத் தயாரிப்புகளை வாங்காமல் நிறுவன வியாபாரம் டல் அடிக்கும் . இதனால் தெரிந்தே பொருட்கள் உடையும் படி தயாரிக்கப் படுகின்றன!

வியாபார யுக்திகள் இப்படி இருக்கையில் தரத்தையும் நீடித்த உழைப்பையும் மட்டும் கவனத்தில் கொண்டு  ப்ரிடெக் என்ற டயர் தயாரிப்பு நிறுவனம் இந்த காற்று அடிக்கத் தேவையில்லாத பங்க்சர் ஆகாத டயரைத் தயாரித்துள்ளது.  வரிசையான குச்சிகளின்  மீது ரப்பர் நிரப்பப் பட்டு டயர் பயன் படுத்தப் படுகிறது. இந்த டயர் பொருத்தப் பட்ட வாகனத்தில் காற்று அடிக்காததால் எரி  பொருள் சிக்கனம் ஆகும். ரப்பர் நிரப்பப் பட்ட  குச்சிகளை நெருக்கி அல்லது ஓட்ட இலகுவாக அல்லது கொஞ்சம்  கடினமாக ஆக்கிக்  கொள்ளலாம்

உபயோகிப்பாளருக்கு தொல்லை தராத டயர்!  வரவேற்போம்!


Follow by Email

Recent Post