இயற்கை உணவு, இயற்கை வேளாண்மைப் பொருட்களின் அவசியம்


 
இந்தப் பதிவும்  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நான் அச்சடித்து விநியோகித்த அறிக்கை. இதை வெளியிட்ட ஆண்டு  2008

நோயின்றி நீண்ட நாள் ஆரோக்யமாக வாழ வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம். உண்ணும் உணவு அனைத்து  கூடிய சரி விகித உணவாக அமைய வேண்டும். சத்துக்களில் பெரும் பகுதி சமைக்கும்  போது  சூட்டினால் இழக்க நேரிடும். இதைத் தவிர்க்க இயற்கை உணவை உட்கொள்ள வேண்டும். இயற்கை உணவு என்பது பச்சையான காய்கறிகள் , பழங்கள் , முளை கட்டிய தானியங்கள் , மூலிகை சாறு இவையே . குறைந்தது ஒரு வேளையாவது இயற்கை உணவு உட்கொள்வது உடல் நலனுக்கு மிக உகந்தது. மல சிக்கலின்றி உடல் கழிவுகள் வெளியேறி உடல் செல்கள் புனரமைப்புப் பெற இயற்கை உணவு அவசியம்

உணவு உட்கொள்ளுவதே உடல் தேவையான சக்தி பெறத்தான். அனைத்து சத்துக்களுடன் கூடிய இயற்கை உணவு உட்கொள்ளும் போது தான் நோய்களை எதிர்க்கும் நோய் எதிர்ப்புத் திறனை உடல் பெறும்.  இதனால் முறையான உணவே மருந்தாகும். கூடியவரை மருத்துவரை நாடி செல்வதை இதன் மூலம் தவிர்க்கலாம்

உடல் எப்படி சக்தி பெற உணவு உட்கொள்ள வேண்டுமோ அதே அளவு முக்கியமானது உணவு செரித்து உண்டாகும் கழிவுகள் நச்சுப் பொருட்கள் வெளியேறும் படி அந்த உணவு அமைவதும்.

நாம் இயற்கை உணவு உட்கொள்ளும்போது தற்போதைய செயற்கைப் பூச்சிக் கொல்லிகள், உரைத்தால் விவளைவிக்கப் பட்ட உணவுப் பொருட்களைப் பயன் படுத்தினால் நமது உடல் செயற்கையான ரசாயன உணவில் கலந்த நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியவில்லை. இதனால் பல்வேறு விதமான நோய்கள் தோன்றும் அபாயம் உருவாகிறது. எனவே இயற்கை உணவு முழுமையாக வேண்டுமானால் இயற்கை பூச்சிக் கொல்லி மற்றும் இயற்கை உரம் இட்டு விளைவித்த இயற்கை வேளாண்மைப் பொருட்களையே பயன் படுத்த வேண்டும்.

இந்த இயற்கை வேளாண்மைப் பொருட்கள் கிடைக்கின்றனவா என்றால் கிடைக்கின்றன அவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற முனைப்புடனேயே இந்த செய்தி உங்களிடம் வருகிறது. இயற்கை வேளாண்மைப் பொருட்களை அனைவரும் பயன் படுத்தினால் நிறைய விவசாயிகள் இயற்கை வேளாண்மை மேற்கொள்வார்கள். அதன் மூலம் இயற்கை வேளாண்மைப் பொருட்கள் தாராளாமாகக் கிடைக்கும்  
2 comments:

ஆரோக்கியம் மிகுந்த கருத்து நன்றி....

Nanrikku enathu nanri. intha vizhippunarvukkaga naan merkondulla panikalil ithuvum onru.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More