Latest News

மீண்டும் உயிர் பெற்ற உலகின் மிகப் பழைய கணினி!


 The National Museum of Computing


 
இங்கே படத்தில் உள்ள பழைய காலக் கணினி 1951 இல் உருவாக்கப் பட்ட ஒரு டஜன் ஆரம்ப காலக் கணினிகளில் ஒன்று. இதனுடன் இருந்த மற்ற கணினிகள் மறு சுழற்சி செய்யப்பட்டு அல்லது அழிக்கப் பட்டு மறைந்து விட்டன. இது ஒன்று தான் மிஞ்சி இருந்து தேசிய கணக்கிடும் அருங்காட்சியகத்தில் காலத்தை கடத்தி கொண்டு இருந்தது. இதை மறுபடி இயக்கத்திற்கு கொண்டு வர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு ஒரு வழியாக இயங்கவும் ஆரம்பித்து உள்ளது.61 வயதான இது இப்போதுள்ள உலகின் மிகப் பழைய கணினியாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

480 அஞ்சல் சுருள்கள் கொண்ட இது  நவீனக் கணினிகள் போல் இல்லாமல் பழைய தொலைப் பேசி இணைப்பகத்தை ஒத்து இருக்கிறது. அடுக்கு அடுக்கான அஞ்சல் சுருள்கள் அதிலும் உண்டு. இந்த சுருள்கள் 828 பளிச்சிடும் வாயு நிரப்பப் பட்ட டெகட்ரான் வால்வுகளையும் கொண்ட அடுக்குச் சட்டங்களின் உள்ளே உள்ளன. இதை மீண்டும் பழைய ஆரம்ப கால நிலைக்குத் திருப்புவது ஒரு மிகப் பெரும்  சவாலாகவே இருந்தது. தற்போது புழக்கத்தில் இல்லாத வால்வுகள் , அஞ்சல் சுருள்கள் , காகித நாடா வாசிப்பிகள் இவற்றை சீர் செய்வது சரியான வேலையாக இருந்தது.

இந்தக் கணினி தற்போதைய கணினிகள் போல ஒன்று , பூஜ்யம் என்ற நவீன சங்கேத குறியீடுகளாக மாற்றாமல் வால்வுகளுக்குள்  இருக்கும் 10 வாயு நிறைந்த குழாய்களை  இயங்கச் செய்து பதின்ம கணக்கிடும் முறையைப் பின்பற்றுகிறது.

இது இயங்கும் போது காகித வாசிப்பிகளின் மற்றும் அச்சடிப்பங்களின் சத்தம் அறை  முழுதும் தட்டச்சு இயந்திரங்கள் கிடு கிடுப்பதைப் போல இருக்கும்



இது 1500 வாட் சக்தி பயன் படுத்தக் கூடியது. ஒரு மடிக் கனிணி இயங்க வெறும் 50 வாட்ஸ் மட்டும் போதுமானது என்றால் இது இயங்க எவ்வளவு சக்தி தேவை என்று பார்த்துக் கொள்ளலாம். இது 1957 முதல் அணுக்கரு ஆராய்ச்சியின் மையமான அணு சக்தி நிறுவனத்தில் செயல்பட்டு பிறகு ஸ்டாபோர்ட் ஷயர்  தொழில் நுட்பக் கல்லூரியில் சொல்லிக் கொடுக்கும் கணினியாக இருந்து 1973 இல் ஓய்வு பெற்றது



இப்போது இது ஒரு அருமையான காட்சிப் பொருளாக அருங்காட்சியகத்தில் வாசம் செய்கிறது. அங்கு செல்வபவர்கள் இதைப் பார்த்து ஆச்சர்யப் படலாம்


Follow by Email

Recent Post