ஹாய் ஜாலி!சைக்கிளே அலுவலகம்!

 

 

 
மேலை நாடுகளில் சைக்கிளில் அலுவலகம் செல்வோர் உண்டு. தொல்லை தராத ஒரு பசுமை வாகனம்.  அதில் கூட அலுவலகம் செல்லத் தேவையில்லாமல் ஒரு அலுவலகமாக மாற்றி விட்டார்கள் இதை வடிவமைத்த டட்ச் நாட்டு மாணவ வடிவமைப்பாளர்கள்! ஈன்தோவன் வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில்  முது நிலைப் பட்டம் படிக்கும் 9 மாணவர்கள். மடிகணினி மற்றும் அலுவலக கோப்புகள் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளும் ஒரு மேஜை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் உங்கள் வேலைகளை அங்கும் இங்கும் வேண்டிய இடத்திற்கு நகர்ந்த படியே கிடைக்கும் இடைவெளியில் இதன் மூலம் வேலைகளைத் தொடரலாம்.

ஒரு இடத்தில் அடைந்து கிடைக்க முடியாதவர்களுக்கு அருமையான வரப் பிரசாதம் இது.  செம ஜாலி தான்  போங்க!


ஒரு ஜோக்:

உங்க வீட்டுக்காரர் எங்கே காணோம்?

அதையேன் கேக்கறீங்க. சைக்கிளே கதின்னு இருக்கார்.

ஏன் வேலைக்குப் போகலியா?

சைக்கிளே தான் அவருக்கு ஆபீஸ். தொழிற் களம் படிங்க தெரியும்!

2 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More