பேரிடர் பகுதிகள் மேல் ராணுவத்தின் உணவுக் குண்டுகள்!

 
 

 
ஆ! குண்டான்னு பயப் பயப் படாதீங்க.  புயல் , மழை, வெள்ளம், பூகம்பம் , சுனாமி மாதிரியான இயற்கைப் பேரிடர்களின் போது  24 மணி நேரத்தில் பாதிக்கப் பட்ட பகுதிகளின் மேல் உயிருடன் இருப்போருக்கு உணவுப் பொட்டலம் மற்றும் தண்ணீரை குண்டு மாதிரி அசுர வேகத்தில் போடப் போகுது அமெரிக்க ராணுவம்.நல்ல இலகுவான அதே சமயம் கெட்டியான கொள்கலன்களில் உள்ள பைகள் பாராசூட்டில் இருந்து போடப் படும். யார் தலையில் விழுந்தாலும் கூட பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்தப் பைகளைத் தயாரிக்க அமெரிக்க ராணுவத்தின் நாடிக் ராணுவ வீரர்கள் ஆராய்ச்சி  அபிவிருத்தி மற்றும் தொழில் நுட்ப மையம் ஆய்வுகள் செய்து  வருகிறது. இந்தப் பைகள்தான் உணவுக் குண்டுகள்!

இந்த உணவுக் குண்டுகள் விமானத்தில்  இருந்து போடப்  படும் போது 1000 அடி முதல் 5000 அடி வரை பாரசூட் விரியாமல் சர்ர்ரர்ர்ர்ரென்று கீழே வந்து கொண்டே இருக்கும் பிறகு பரசூட் விரிந்து கொண்டு அதில் இருந்து கீழே கொட்டப் படும். இங்கேதான் கீழே விழுந்தால்  அதற்கும் யார் மண்டைக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் செய்யவே ஆய்வு

2005 பாகிஸ்தான் பூகம்பம் மற்றும் ஹைடி 2010 பூகம்பப் பகுதிகளில் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவம் வரும் காலத்தில் சிறப்பாகப் பணியாற்ற இந்த உணவுக் குண்டுகள் உதவும். பேரிடர் பாதித்த பகுதிகளில் வீச என்று ஆயிரக் கணக்கில் உணவு மற்றும் தண்ணீர் அடைக்கப் பட்டு தயார் நிலையில் வைக்கப் படும் இந்த குண்டுகள்

இவை அபாயக் குண்டுகள் இல்லை. அபாயப் பகுதிகளில் பசியாற்றும் வரவேற்புக்குரிய குண்டுகள். குண்டுகள் முழங்கட்டும்!

தமிழ் ப்ளாக்குகளை விடாமல் படியுங்க. சுடமால் படியுங்க. நன்றி!

3 comments:

நல்லதொரு தகவலுக்கு நன்றிங்க...

மிகவும் நல்ல தகவல்.....பகிர்வுக்கு மிக்க நன்றி...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அறியாத் தகவலை அறிந்து கொண்டோம் நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More