அபாயப் பகுதிகளை தொலைவில் இருந்து பார்க்க உதவும் கேமராப் பந்து!

 Bounce Imaging

 
ராணுவத்தினர், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் அபாயகரமான அறை அல்லது வழிப் பாதையில் என்ன தான் இருக்கின்றது என்று உள்ளே செல்லாமலே பார்க்க உதவத்தான் இந்த கேமராப் பந்து. இதற்குள் ஆறு காமேராக்கள், விரைவு மானிகள் (acceleratometers),  சமநிலைப் படுத்திகள்(gyroscopes) மற்றும் வெப்ப உணர்விகள்( temperature sensors) எல்லாம் உண்டு .5,000 டாலர் கொண்ட இது மாதிரி கேமராப் பந்து இஸ்ரேல் ராணுவத்திடம் ஏற்கனவே உள்ளது. இதைத் தயாரிக்கும் நிறுவனம் இதை விட குறைவான விலையில் இதைத் தரத் திட்டமிட்டு இருக்கிறது.

இயற்கைப் பேரிடர் மற்றும் அபாயத் தருணங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது இந்தப் பந்து வெகுவாக உதவும். உள்ளே வீசும் போது எக்குத் தப்பாக சிக்கிக் கொள்ளாதபடி கவனமாகக் கையாள வேண்டும். அப்படி மீறி சிக்கிக் கொண்டால் வேறு உபரி பந்துகளை கை வசம் வைத்துக் கொண்டு உபயோகப் படுத்த வேண்டியிருக்கும்

1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More