விண்வெளியில் இருந்தே ஓட்டுப் போட்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள்! தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா தன்னை எதிர்த்து  போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மிட்  ரோம்னியை தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.

இந்ததேர்தலின் போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இப்போது உள்ள ஆறு பேரில்  இரு அமெரிக்க விண்வெளி வீரர்களாக இருக்கும் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்சும் ,போர்டும்  விண்வெளியில் இருந்தே தங்களது வோட்டுக்களை பதிவு செய்தனர். இவர்களுக்காக மின்னணு முறையில் ஓட்டு  சீட்டு ஜான்சன் விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப் பட்டது. அவர்கள்  பூர்த்தி செய்து அனுப்பிய ஓட்டு சீட்டு விண்வெளிமையத்தை வந்தடைந்து ரகசியத் தன்மை பாது காக்கப் பட்டு  ஓட்டு அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டது.
 
விண்வெளியில் இருந்து ஓட்டுப் பதிவு செய்யும் வசதி 1997  இல் டெக்சாஸ் சட்ட மன்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவால் கொண்டு வரப்பட்டது. இதைப் பயன் படுத்தி விண்வெளியில் இருந்து  முதல் முதல் டேவிட் வூல்ப்  விண்வெளி வீரர் ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தில் இருந்து 1997 இல் ஓட்டுப் பதிவு செய்தார். அமெரிக்கத் தரப்பில் இருந்து லெராய் சியோ 2000 இல் முதன் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தனது பதிவைச் செய்தார்.

ஓட்டுப் போடுவது ஒரு ஜனநாயகக் கடமை . அதை விண்வெளியில் இருந்தும் செய்த இவர்களைப் பாராட்டுவோம் 
3 comments:

ரொம்ப நல்ல தகவல், நன்றி.

Paarattukku nanri. sila ariviyal visayangalai pathrikkalai munthik kondu tharukiren. athil ithuvum onru.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More