சிறு நீர் மூலம் மின்சாரம்!

 

 
என்ன சிறுநீரா என்று முகம் சுளிக்காமல் எப்படித்தான் சிறு நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாமே.

ட்யுரோ ஐநா  அடி போலா,  அகிண்டிலி அடி போலா,  பாலேகே  ஒலுவடோயின் மற்றும் பெல்லோ எனியோலா ஆகிய டீன் ஏஜ் மாணவிகள் சிறு நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை உருவாக்கியுள்ளார்கள்.

சமீபத்தில் நைஜீரியாவின் லாகோஸில் நடை பெற்ற உருவாக்குவோர் கண்காட்சியில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் முதல் நவீனக் கண்டு பிடிப்புகள் வரை இடம் பெற்றிருந்தன. அவற்றில் இந்த மாணவிகளின் சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டரும் இடம் பெற்று அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இதன் மூலம் ஒரு லிட்டர் சிறுநீர் கொண்டு ஆறு மணி நேரத்திற்கான மின்சாரம் பெறலாம்.

இதில் மின்பகுப்பு அறையில்(electrolytic cell)  சிறு நீரை எடுத்துக் கொண்டு அதில் இருந்து ஹைட்ரஜன் வாயு பிரிக்கப் படுகிறது. இந்த ஹைட்ரஜன் தண்ணீர் வடிகட்டிக்குள் நகர்ந்து பின் ஒரு வாயு கலனுக்குள் தள்ளப் படுகிறது. அங்கு திரவ போராக்ஸ் வழியாக செல்லும்போது அதில் இருந்து ஈரம் அகற்றப் பட்டு ஜெனரே ட்டருக்குள் புகுந்து அதை இயக்கி மின்சாரம் தயாரிக்கப் படுகிறது.கண்டிப்பாகப் பயன் படுத்தக் கூடிய கண்டுபிடிப்பு இது.

தயாராக இருப்பவர்கள் பயன் படுத்தி மின்சாரம் பெறலாம்

4 comments:

நல்லதொரு தொழிற்நுட்பம்... நன்றி...

அருமையான தகவல்!!!!!.......இந்த முயற்சியில் வெற்றி பெற்ற
இந்த உறவுகளின் முயற்சிகள் மேலும் நல்ல பயன்களைத் தந்து
இவர்களின் சாதனையால் இவர்களை இந்த உலகமே போற்றும் நிலை
உருவாக வேண்டும் என மனதார வாழ்த்துவோம் .மிக்க நன்றி இனிய
தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு .

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More