பூமி அதிர்வின் போது கட்டிடப் பாதிப்பறியும் உணர்வி !-மாணவரின் கண்டுபிடிப்பு,பூமி அதிர்வின் போது கட்டிடங்களில் விரிசல் ஏற்படும். இன்னும் பெரிய பாதிப்புகளும் ஏற்படும். இந்தப் பாதிப்பை உடனுக்குடன் கண்காணிக்கப் புதிய முறை ஒன்றை நியூசிலாந்து விக்டோரியா பல்கலை நான்காம் ஆண்டு மாணவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது கட்டிடப் பாதிப்பைத் தெரிவிக்கும் உணர்விகள் மின்கலங்கள் மூலமாக இயங்கும் கட்டிடத்தின் மின் விநியோகப் பலகைகளுக்குள் செருகப் பட்டு இயங்கும். இந்த மாணவரின் உணர்வி கட்டிடத்துடன் இணைக்கப்  பட்டு பூமி அதிர்வு ஏதும் இல்லாத போது அணைப்பில் இருக்கும். பூமி அதிர ஆரம்பிக்கும் போது  கட்டிடம் இப்படியும் அப்படியும் அசையும் இயக்கத்தினால் உலுக்கப் பட்டு விழித்துக் கொண்டு பாதிப்புத் தகவல்களை நேரடி அலை போல தெரிவித்துக் கொண்டே இருக்கும். இந்தத் தகவல்கள் கொத்துக் கொத்தாக பூமி அதிர்வுப் பகுதிக்கு அப்பால் உள்ள ஒரு கணினிக்குத் தெரிவிக்கும். இதைப் பார்க்கும் பொறியாளர்கள் கட்டிடம் எந்த அளவு சேதம் அடைந்துள்ளது என்று தெரிந்து கொண்டு அதை சரி செய்யும் நடவடிக்கை எடுப்பார்கள்  இது பூமி அதிர்ச்சி பாதிப்புகளை ஆய்வு செய்யும் டே பா பூமி அதிர்ச்சி இல்லத்தில் அசுர சக்திகள் கண்காட்சியில் வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டது. குலுங்கினால் வேலை செய்யும் உணர்வி! பூமி குலுங்கும் போது கட்டிடங்களின் பாதிப்பை அறிய இது தேவை தான்

3 comments:

நல்ல கண்டுபிடிப்பு... தகவலுக்கு நன்றி...

அருமையான கண்டுபிடிப்பு தகவலுக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More