கொரிய மொழி பேசும் யானை!

 யானை பிளிருவதைக் கேட்டிருக்கிறோம். அது பேசவும் செய்கிறதாம்! கோஷிக் என்ற ஆசிய யானை கொரிய மொழி தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளும் வார்த்தைகளை பேசுகிறது.இது தன்னுடைய தும்பிக்கையால் அப்படி பேசுகிறது. அன்னியோங் (ஹலோ) , அஞ்சா(உட்கார்), அநியா(இல்லை), நுஓ(படு), சாஓ(நல்லது) என்ற ஐந்து வார்த்தைகள் மட்டும்தான் அது பேசுவது.திமிங்கலம்  மனித குரலை மிமிக்ரி  செய்கிறது என்ற சமீபத்திய செய்தியைத் தொடர்ந்து இந்த செய்தி

இந்த யானையின் பேசும் திறன் உயிரியல் மற்றும் பேசும் திறனின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவும்.  மனிதர்களின் பேச்சில் ஸ்தாயி , ஒலியின் தன்மை இரண்டும் முக்கியமானதாகும். இந்த யானையின் குரல்   இவை இரண்டையும் அப்படியே பிரதி பலிப்பதாக உள்ளது. அதுவும் தன்னுடைய பயிற்சியாளன் ஆன யானைப்பாகனின் குரல் ஸ்தாயியை அப்படியே பிரதி எடுத்தது போல பேசுகிறது.

ஆசிய , ஆப்ரிக்க யானைகள் பார லாரிகள்  போவது போல மிமிக்ரி செய்வதாகவும், ஒரு ரஷ்ய மிருகக் காட்சி சாலையில் இருந்த யானை ரஷ்ய மற்றும் கசாக் மொழியில் சிலவற்றை  பேசுவதாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் இதெல்லாம் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப் படவில்லை. கோஷிக் யானையைப் பொறுத்த வரை அதன் பேச்சு கொரிய மொழி பேசும் மக்களால் கவனிக்கப் பட்டு அது பேசும் வார்த்தைகள் என்னென்ன என்று ஆராய்ச்சியாளர்கள் மூலம் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

இந்த கோஷிக்  யானை இப்படி ஏன்  பேசுது என்று பார்க்கிற போது அது தென் கொரியாவின் எவர்லாந்து மிருகக் காட்சி சாலையில் ஐந்து வருடங்களாக இருந்த ஒரே யானை அதன் சமூகத் தொடர்புகள் எல்லாம் யானைப் பாகனும் மற்ற மனிதர்களும் தான் என்று தெரிய வந்தது. அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியாகவே அது கொரிய மொழி பேசுவதும் என்று புரிந்தது
 திமிங்கலம்  மனித குரலை மிமிக்ரி  செய்கிறது என்ற சமீபத்திய செய்தியைத் தொடர்ந்து இந்த செய்தி. போகிற போக்கை பார்த்தால்  மனிதர்களுடன் சரளமாக பிராணிகள் பேச ஆரம்பித்து விடும் போல ! தவிர கோஷிக் இங்கே இருந்தால் வணக்கம் என்று சொன்னாலும் சொல்லும்!  தமிழ் அதற்கு பிடிக்கவும் செய்யும் என்றும் நம்பலாம்

5 comments:

நம்பவே முடியவில்லை!....பகிர்வுக்கு மிக்க நன்றி.........

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Pesuvathai oorjithap paduthum oru soodana vegu sameepathiya seythi ithu. Nanri.

வியப்பான தகவல்...

நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More