பழைய கார் டயர்கள் சாண்டி சூறாவளியைத் தடுத்திருக்கும்!

 


அவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியை வெறும் டயர்களை வைத்துத் தடுப்பதா? கொஞ்சம் நிதானமாகத்தான் இருக்கீங்களா? என்று கேள்விகள் எழுப்புமுன் இதையும் கொஞ்சம் படித்து விடுங்கள்.


இந்த யோசனையை சொல்லி இருப்பது மதிப்பு மிகுந்த எடின்பர்க் பல்கலைக் கழக   பொறியியல் வடிவமைப்பு பேராசிரியர்  ஸ்டீபன் சால்ட்டர். சூறாவளி சக்தி பெறும்  மார்க்கத்தை அகற்றி விடுவது மூலமாக இதைச் செய்யலாம் என்கிறார்.

10 முதல் 100 மீட்டர்கள் விட்டமுள்ள ஒரு பெரிய பிளாஸ்டிக் வளையத்தினுள் உபரி கார் டயர்களை அது மிதக்கும்படி அதை ஒரு தொட்டி போல அதன் மத்தியில் ஒரு பிளாஸ்டிக் குழாயை அடிப்பகுதியில் இருந்து கீழ் நோக்கி செல்லும் படி இணைக்க வேண்டும். இந்தக் குழாய் 100 மீட்டர்கள் வரை கீழ் நோக்கி செல்ல வேண்டும். ஆயிற்று. இப்போது இந்தத் தொட்டியை கடலில் எங்கு புயல் மையம் கொள்கிறதோ அங்கே மிதக்க விட வேண்டியதுதான்

கடல் அலைகள் இந்த தொட்டிக்குள் நிறையும் போதெல்லாம் சூடான தண்ணீர் சேர ஆரம்பிக்கும் அந்த சூடான தண்ணீர் அடிக் குழாய் வழியாகக் கீழ் இறங்கி அங்கே உள்ள தண்ணீரை உஷ்ணப் படுத்தி தன வெப்பத்தை இழக்கும். இது போல் தொடர்ந்து வெப்பத்தை கடத்தும் வெப்ப பம்ப்  ஆக இயங்கி கடலின் மேற்பரப்பு உஷ்ணத்தை பெருமளவில் அகற்றி விடுகிறது. சூறாவளிகள் கடல் மேற்பரப்பில் இருந்துதான் சக்தி பெறுவதால் சூறாவளிகள் தோன்றும் சாத்தியங்கள் அடைபட்டு விடும். எல்லாவற்றையும் துவம்சம் செய்யும் சூறாவளியே இப்போது துவம்சம்! பாதிக்கப் படக் கூடிய பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் சூறாவளியை எதிர் கொள்வதற்கு தயாராவதை விட்டு தங்கள் வழக்கமான வேளைகளில் கவனம் செலுத்தலாம்

இந்தத் பிளாஸ்டிக் வளையத் தொட்டி படங்கள் காப்பி ரைட் படங்கள்  போலத் தோன்றுவதால் அவை வெளியிடப் படவில்லை.
7 comments:

நல்ல தகவல் நண்பரே...

நன்றி...

SIR WE CANNOT STOP OUR NATURE IT CREAT VERY SERIOUS PROBLEM

some phenomenon like hurricanes are acting beyond the usual proportions due to the very fact we have systematically disrupted nature. so nothing wrong to neutralise these excesses

Nanri. thindukkal thanabalan avargaley

உங்கள் பதிவுகள் அனைத்தும் புதுமையாக உள்ளது, 100 பதிவுகள் போட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள், இது போன்ற தகவல்களை எங்கிருந்து சேகரிக் கின்றீர்கள். நன்றி ஐயா

Ariviyalai muthalil naan arinthu kollavendum. arinthathai makkalidam pakirnthu kolla vendum enra adippadaiyil pakirkiren. iniathil thaan ivatrai arikiren. pala pathivugal seythiththalkal podum munne naan podukiren. sila pathivugal muzhukka muzhukka en sontha sinthanaigal.utharanamaga ulaga veppamayamaathalai thadukka maram naduvom. enakku en vasayitte irukku, minsaaran engira kadavul, veerar felixin thunigara vinvelik kuthippu ponravai avai. Melana ariiyial saarntha samooga sinthanaigal thaan en pathivukalukkuk kaaranam. Muga noolil angilathil podukiren. enakku enru rasikar pakkamum angu undu. india matrum ulaga nadukalil niraiya manavargalai nanbarkalagap petru ullen. Ungal vazhukkalukku Nanri.

very useful and communicative message to all. Certainly could be used in future.

c.karunanidhi

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More