கூரை மீது சூரிய ஒளி மின்சாரம் -சுருக்கமான தகவல்கள்

 

 
மிகக் கடும் மின் வெட்டு நிலவும் இன்றைய சூழலில் அவரவர் வீட்டில் கூரை மீது மின்சாரப் பலகைகள் அமைத்து மின்சாரம் பெறுவது நலம் என்ற கருத்தை ஏற்கனவே மின்சாரம் என்கிற கடவுள் என்கிற பதிவில் முன் வைத்து இருந்தேன். இது பற்றி விபரங்கள் சேகரித்து வருகிறேன். இருந்தாலும் சுருக்கமாக இது வரை பெற்ற தகவல்கள் இதோ. நான் தகவல் சேகரித்த வரை 1000 வாட்ஸ் உபயோகம் வரை 1.5 லட்சத்தில் கூரை மீது  சூரிய பலகை அமைக்கலாம். சீனா தயாரிப்பும் உள்ளது. விலை 85,000 மட்டுமே. இதற்கு  gaurantee இல்லை. ஒரு மின் விசிறி மற்றும் ஒரு tube light  உபயோகத்திற்கு 100 வாட்ஸ் தான் செலவாகும். 200 வாட்ஸ் வரை   பலகை அமைக்க 40,000 வரை செலவாகும். மானியம்  கிடைத்தாலும் அது பெறாமலே விலையைக் குறைத்து விற்பதாக ஒரு தயாரிப்பாளர் தெரிவித்தார் மேற் சொன்ன 40,000 பலகைக்கு ஏற்கனவே  UPS matrum inverter  இருந்தால் அது கழித்து 25,000 வரை செலவாகும். சில வெளி நாட்டு தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. இவை இன்னும் இங்கு வரவில்லை.   இன்னும் விரிவான செய்திகளுக்காக விபரங்களுக்காக கொஞ்சம் காத்திருங்கள்

5 comments:

கண்டிப்பா காத்திருப்போம்....சொல்லுங்க.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

உங்கள் தகவலுக்கு நன்றி.இன்னும் தகவலை தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்.

நன்றி ஐயா , ஆவலோடு காத்திருக்கிறேன்

Nanri. ithu ponra pathivugal anaivarukkum sellattum. nanbargaluanum pagirnthu kollungal

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More