இந்த கிரெடிட் கார்டின் விலை ஒரு லட்சம் டாலர் மட்டுமே!

 

 
கிரெடிட் கார்டு என்பது கடைகளில் மற்றும் தெரிவு செய்யப் பட்ட பெட்ரோல் பங்க் , உணவகம்  போன்ற இதர இடங்களிலும் கொடுக்க வேண்டிய தொகையை  இந்த கார்டு மூலம் செலுத்தி விட்டு பிறகு அந்தக் கார்டை வழங்கிய வங்கிக்கு அந்த தொகையை குறிப்பிட்ட நாள் கழித்து  செலுத்தி விட வேண்டும். இதை பிளாஸ்டிக் பணம் என்றும் அழைக்கிறார்கள். இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்ததுதான் மேலே சொல்லுங்கள்  என்கிறீர்கள். இதோ விசயத்துக்கு வருகிறேன் . இந்த கிரெடிட் கார்டு  பெற ஒன்றும் அதிக செலவாகாது.  ஆனால் படத்தில் இருக்கும் கார்டு பெற நாம் 1,00,000 டாலர் ரஷ்யாவின் ஸ்பேர் வங்கிக்கு செலுத்த வேண்டும். அப்படி என்னதான் இருக்கு இந்த கார்டில்?  தங்கத்தாலும் வைரத்தாலும் செய்யப் பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு.இதன் தயாரிப்புச் செலவு 65,000 டாலர். மீதமுள்ள 35,000 வங்கிக்கு லாபம் , ஹூம்! என்று நினைத்தால் அப்படியில்லை. அந்த மீதத் தொகை யார் கிரெடிட் கார்டை வாங்கினார்களோ அவர்கள் கணக்கிலேயே வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப் படும். இன்னொரு முக்கியமான விஷயம்:  இந்தக் கார்டை வாங்குபவர் மன வளர்ச்சி குன்றியவராக இருக்க வேண்டும் .அதுவும் ஒரு பணக்கார மன வளர்ச்சி குன்றியவராக இருக்க வேண்டும். இல்லா விட்டால் எப்படி அதை வாங்குவதாம்?


ஒரு ஜோக்:

திருடன் 1:  ஒரு லட்சம் டாலர் கிரெடிட் கார்டை அமுக்கியாச்சு. வா போய்  அந்த 35,000 டாலர் பணத்தை எடுத்துக்கலாம்

திருடன் 2: யாருடா இவன் அதில் இருக்கிற தங்கம் வைரம் எல்லாம் வித்தால் அதுக்கு மேலேயே கிடைக்கும். போய் பணம் எடுக்க பாஸ் வர்ட் தெரியாதே. போய் மாட்டிக்கிறதா? தங்கம் வைரம் விக்கிற வழியைப் பாக்கலாம் 

1 comments:

வாங்கிடுவோம்...

தகவலுக்கு நன்றி...

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More