பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?



வணக்கம்! உங்களது நேரம் இனிமையாக அமையட்டும்! நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழிற்களத்தில் பதிவு எழுதுகிறேன். என்ன எழுதலாம் என்று இன்று யோசித்த பொழுது, இதோ, இந்தத் தலைப்பு தான் தோன்றியது!

என்னடா, பெண்கள் வேலைக்குச் செல்லலாமா என்கிற கேள்வி கேட்கிறேனே  என்று பார்க்கிறீர்களா? அதுவும் எல்லோருக்கும் விடை தெரிந்த ஒரு கேள்வி?

ஆம், எல்லோரும் என்ன சொல்வார்கள்? பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்று தானே? பெண்களுக்கும் உரிமை உண்டு, அவர்களது திறமையை நிரூபிக்க! இப்படித் தானே எல்லோரும் சொல்வீர்கள்?

இல்லை சிலர் மாறுபட்டும் சொல்லலாம், வேறு பதில். இல்லை, பெண்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும், வீட்டு வேலை தான் பார்க்க வேண்டும் என்று.

எது எப்படியோ, உங்கள் பதில் என்னவோ. என் பதில், பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பது தான்.

என்னடா, நானே ஒரு பெண், நானே பெண்களுக்கு எதிராய்ப்  பேசுகிறேன் என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால், இன்று பெண்கள் வேலைக்குச் செல்வதால் தான், தீவிரவாதம் அதிகரிக்கிறது, தீயன எல்லாமே அதிகரித்து வருகிறது, இப்படிச் சொன்னாள் நம்புவீர்களா?

நம்புங்கள், உண்மை தான். பெண்கள் வேலைக்குச் செல்வதால், அத்தனை தீமைகள் நடக்கின்றன.

முன்பெல்லாம், வீட்டில் தான் இருப்பார் அம்மா. வீட்டு வேலைகள் எல்லாம் பார்ர்த்துக் கொள்வார், அப்பா, வெளியே சென்று வேலை பார்த்து பொருள் ஈட்டி வருவார்.

இன்று? அம்மா, அப்பா, இருவருமே வேலைக்குச் சென்று விடுகிறார்கள்.

வீட்டில் வேலைகளையும் பெண் தான் பார்க்க வேண்டும், வெளியில் நிறுவனத்திலும் வேலையைப் பார்க்க வேண்டும். எத்தனை கொடுமை இது? இரண்டு வேலையையுமே உருப்படியாய் செய்ய முடியாது!

வீட்டில் பிள்ளைகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள், ஐயோ பாவம் அவர்கள்.
அம்மா எப்போ வருவார் என்று காத்துக் கிடக்க வேண்டும்! அப்படியே அம்மா வந்துவிட்டாலும், அம்மாவிடம் ஆசையாகப் பேசலாம் என்றால், "அம்மாவுக்கு ரொம்ப அலுப்பா இருக்குப்பா, நீ போய் படி", இப்படித் தானே சொல்வார்கள்!

பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்?

இதனால் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க முடியாது, பிறகு, பிள்ளைகள் தவறான வழியில் செல்ல வாய்ப்புகள் அதிகம் தானே? இதன் விளைவு தான், பெருகி வரும் குற்றங்கள்.

சொல்வார்கள், இப்படி,

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே..."

இதில் எத்தனை உண்மை இருக்கிறது? தவறு செய்தால், சுட்டிக்காட்டி வழி நடத்த அன்னை அருகில் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று? உணவு கொடுப்பது மட்டும் தான் அன்னையின் வேலையாக இருக்கிறது. அந்த உணவும் பல நேரங்களில், நூடுல்ஸ் என்றே முடிந்து போகிறது!

பிறகு எங்கே வழிநடத்த? வழிநடத்த இவர்கள் நம்புவது பள்ளிகளையும், பயிற்சி மையங்களையும் தான்!

நீங்கள் இப்படிக் கேக்கலாம், "அம்மா தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமா? ஏன் அப்பா பார்த்துக் கொள்ளக் கூடாதா? என்று...

ஆனால், அம்மா பார்ப்பது போல வராது! மனதளவில் நல்ல தாக்கத்தை அம்மாவால் தான் ஏற்ப்படுத்த முடியும் அப்பாவை விட அதிகமாய்.

இப்படிச் சொல்வார்கள், பெண்கள் மனவலிமை கொண்டவர்கள், ஆண்கள் உடல் வலிமை கொண்டவர்கள் என்று - இப்படி காந்தி சொன்னார் என்று பள்ளியில் என் ஆசிரியை சொன்னதாக நினைவு.

இதனால் பெண்கள் படிக்க வேண்டியதில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை. பெண்கள் படிக்க வேண்டும், ஏன், வேலைக்கும் செல்லலாம், ஆனால், அந்த வேலை பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரத்தைக் களவாடாமல் இருக்க வேண்டும்.

என் கல்லூரியில், ஒரு வகுப்பில் கலந்துரையாடல் செய்தோம், எது பற்றி?

இதோ இந்தத் தலைப்புத் தொடர்பாகத் தான். "யார் சுதந்திரமானவர்கள்? பெண்களா? ஆண்களா?

அப்போது பெண்கள் வேலைக்குச் செல்வது பற்றிப் பேச்சு வந்தது, ஆசிரியர் கேட்டார், இங்கிருக்கும் ஆண்களில் யாரெல்லாம், வேலைக்குச் செல்லும் பெண்ணைத் திருமணம் செய்வீர்கள் என்று!

ஒருவர் கூட கை உயர்த்தவில்லை. "இப்போதெல்லாம், ஆண்கள் விரும்புவதில்லை போலும் பெண்கள் வேலைக்குச் செல்வதை!" என்று நினைத்துக் கொண்டேன் நான்.

பிறகு எனது ஆசிரியரும் கூட, பெண்கள் பக்கம் திரும்பி, நீங்கள் எல்லாம் படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாதீர்கள். குடும்பத் தலைவியாக இருங்கள் என்றார்.

எங்கள் பக்கம் எல்லோரும் அவரை முறைத்தோம்.

உடனே அவர் சொன்னார், பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி. நான் ஆண் என்பதால் இதைச் சொல்லவில்லை, பொதுவாகத் தான் சொல்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டார்!

பெண்கள் வேலைக்குச் செல்வதில்,நன்மை என்ன என்றால், பொருளாதாரம் நல்லபடியாக இருக்கும்.

இது வரை வேலைக்குச் செல்ல வேண்டும், படித்து பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நானே, சற்றுக் குழம்பித் தான் போனேன் , என் ஆசிரியர் பேசி முடித்தவுடன்.

இந்த ஆசிரியர்கள் தான் எத்தனை திறமையானவர்கள், அவர்கள் சொல்ல்வது என் மீது அத்தனை தாக்கத்தை ஏற்படுத்துகிறது! பேச்சில் கெட்டிக்காரர்கள்!

இன்றெல்லாம் இணையத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இன்று இது எல்லோராலும் முடியுமா என்றால் "இல்லை" என்று தான் சொல்ல வேண்டும்.

உங்களை தெளிவாகக் குழப்பி விட்டேன் என்று எனக்குப் புரிகிறது. என்ன செய்ய, பல நேரங்களில் என் பதிவு அப்படித் தான் போய்விடுகிறது!

செல்லலாமா வேண்டாமா? முடிவு அவரவர் கையில், இப்படிச் சொன்னால், சரியாக இருக்கும் தானே?


---------------------

கண்மணி அன்போடு!



8 comments:

உங்கள் பதிவா குழப்பமாய் இருக்கும் ? என்னே தன அடக்கம், சகோ உங்களுடைய , சகோ.சீனுவின் எழுத்து நடைக்கு நான் ரசிகன். நன்றாக எழுதுகிறீர்கள். நன்றி

இந்தக் குழப்பத்தால் நான் வேலைக்கு போகலை...

செழியன் : மிக்க நன்றி... உங்களுக்குக் குழப்பமா இல்லனா சரி தான்! எனக்கே குழப்பமா தான் இருக்கு என் பதிவு அதான் சொன்னேன். :)

மிக்க நன்றி...

திண்டுக்கல் தனபாலன், ஐயா, குழப்பத்துல நீங்க வேலைக்குப் போகலையா??? :) :) நாளைக்கு இன்னொன்னு எழுதறேன், அதையும் மறக்காம படிங்க, இன்னும் தெளிவாகிடுவிங்க :)

நன்றி!

பிளாஸ்டிக்கை பயன் படுத்துவோம் என்ற என் பதிவை படித்தீர்களா? , இந்த பதிவு கொஞ்சம் குழப்பம் தான், நான் குறிப்பிட்டது உங்கள் மற்ற பதிவுகளை சகோ நன்றி

ம்ம்.. படித்தேன். உங்களுக்கு அதில் கருத்துரை கூட போட்டேனே, பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, வரவில்லையோ?

poriyiyal kalloori onril muzhuvathum maanavigal pangu petra yaar pillagalai nanga valarppargal? padiththa pengala? padikkatha pengala enra debate nadai petrathu.naan naduvar. padiththa pengal neram appoint ment seythu pillaigalai kavanippargal en enraal velaikku selvathaal. samaiyalum sariyaaga seyya maatargal. padikkatha pengalukku kuzhanthaigalai aduthuthaan avargal neram. enna sappitaal kuzhanthaikku nallathu. eppadi seyya vendum enpathellam padikka pengalukku athu padi. en theerpu padikkatha pengalin pakkam thaan. itharkkaga padippathai niruththa vendaam. intha karuththukkalai vaithuk kondu paditha pengalum nalla valarppagalaam enru mudithen

நல்ல தீர்ப்பு ஐயா..
கருத்துரைக்கு நன்றி...

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More