Latest News

மின்சாரம் என்கிற கடவுள்!


 

 கடந்த 24  மணி நேரத்தில் எனக்கு ஏற்பட்ட  அனுபவத்தின் விளைவு இந்தப் பதிவு.  சாதரணமாகவே மின் தடை என்பது வழக்கத்தில் இருந்த போதிலும் நேற்று காலை   8.30   மணிக்கு மின் தடை ஏற்பட்டது. வழக்கம் போல் ஒரு இரண்டு மணி நேரம் கழித்து வந்து விடும் என்று நினைத்தால் வரவே இல்லை. ட்ரான்ஸ்பார்மர் கோளாறாம். இந்த ட்ரான்ஸ்பார்மர் என்பது ஒரு மின் அழுத்த மாற்றி. கம்பிகள் மின் ஓட்டத்துக்கு செல்ல செல்ல எதிர்ப்பு தெரிவிப்பது போல் மின் ஓட்டத்தை வேகமாக செல்ல விடமால் செல்ல செல்ல வேகத்தைக்  குறைத்து மின் அழுத்தத்தை  குறைத்து விடும். இதனால் ஆங்காங்கே ட்ரான்ஸ்பார்மர் அமைத்து மின் அழுத்தத்தை ஏற்றி கொடுப்பார்கள் . வரும் மின்சாரத்தின் அளவு குறைவாக இருக்கும் போது ட்ரான்ஸ்பார்மர் உரிய முறையில் செயல் படாமல் பழுதடைகிறது. இப்படி பல பகுதிகளிலும் இப்போது ட்ரான்ஸ்பார்மர் கோளாறுகள் நடை பெறுகின்றன.

சரி. என்ன நடந்தது மேற்கொண்டு என்று பார்ப்போம்.  காலையில் 8.30 மணிக்குஆரம்பித்த ட்ரான்ஸ்பார்மர் சரி செய்யும் வேலை மாலை 4 மணிக்கு முடிந்தது. இப்போது மின்சாரம் வருவதும் நின்று விட்டது.  விடிய விடிய ஹ ! வந்துடுச்சு என்று நினைக்க நினைக்க ஆ! போய்டுச்சு ! என்று சொல்லும் படியாக மின்சாரம் வருவதும் போவதும்  ஆக இருந்து அதிகாலை 2   மணிக்கு ஒரு வழியாக வந்து மறுபடி காலை 6  மணிக்குப் போய்  10 மணிக்கு வந்து மறுபடி  12  மணிக்குப் போனதுதான். மாலை 4 மணிக்கு எட்டிப் பார்த்து உள்ளது..

வெறும் மின் தடை மட்டும் என்பதற்காக மட்டும் இந்தப் பதிவு அல்ல. மின்சாரம் எவ்வளவு தூரம் நமக்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப் படுகிறது.என்பதை சுட்டிக் காட்டவும் நாம் இதற்க்கு என்ன செய்யலாம் என்பதை ஆராயவும் தான். 

வீட்டில் பயன் படுத்தும் மின் விசிறி, மிக்சி , கிரைண்டர், மின் விளக்குகள் , கம்ப்யூட்டர், தொழிசாளைகளில் பயன் படுத்தும் கருவிகள் அனைத்திற்கும் மின்சாரம்தான் ஜீவன் . மின்சாராம் இல்லையென்றால் இவற்றின்  இயக்கம் நின்று விடுகிறது. மின்சாரம் இல்லையென்றால் அன்றாட சகஜ வாழ்க்கை நின்று போன மாதிரித் தான். இவற்றையெல்லாம் இயக்கும்  மின்சாரம் ஒரு கடவுள் தான்! அதுவே வழியும் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறது!

நாம் மின்சாரத்திற்கு அரசாங்கத்தைத்தான் எதிர் பார்க்கிறோம். அனல் மின் நிலையமா? நிலக் கரி வேண்டும், புனல் மின் நிலையமா? மழை வேண்டும். இது போக காற்று மின் சக்தியா காற்று வேண்டும். சூரிய மின் சக்தியா சூரிய ஒளி வேண்டும். இவற்றில் அரசாங்கத் திட்டங்கள் அனல், புனல் மின் நிலையங்களை சார்ந்து உள்ளன. காற்று மின் சக்தியும் சூரிய மின் சக்தியும் தான் தனியார் தயாரிக்கும் படி உள்ளது. இதிலும் குறிப்பாக ஒவ்வொரு வீடு மற்றும் காலியிடங்களில் கூரை மீது சூரிய மின் பலகை அமைத்து அங்கங்கே மின்சாரம் பெற வாய்ப்பு உண்டு. எல்லோரும்  இதற்க்கானமுயற்சிகளில் ஈடுபட வேண்டும் 

காற்று மின்சக்தியிலும் கூட எனக்குத் தெரிந்து ஒருவர் அவர் வீட்டு மாடியிலே மின் விசிறி மூலமே காற்று மின் சக்தி உற்பத்தி செய்கிறார். இவர் போன்றோரின் கண்டு பிடிப்புக்கு ஆதரவு தந்து பயன் படுத்திக் கொள்ள வேண்டும் .

எல்லோரும் இப்படி மின்சாரக் கடவுளை தாங்களாகவே உருவாக்கி கொள்ளும் நாள் வந்தால் அன்று மின்சாரம் சிரிக்கும். அதில் இறைவனைக் காணலாம்!

ஒரு ஜோக்:

மின்சாரத்தைக் கண்டு பிடித்தது யார்?

யார் கண்டு பிடிச்சிருந்தா என்ன. இப்போ அது அப்பப்போ காணாம போயிருது. அது  தொலையாம இருக்கிற வழியைக் கண்டு பிடிக்கணும்!

Follow by Email

Recent Post