பெற்றோர்களே தாய்மார்களே

அனைவருக்கும் வணக்கம்.

கூடாஒழுக்கம் அப்படி என்றால் என்ன ?

 நண்பர்களே,காலையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தேன் அப்பொழுது என்னிடம் வந்துநின்ற எங்கவீட்டமா ,ஏங்க ஒருநிமிடம் நான் சொல்லும் விஷயத்தை கவனமாக கேளுங்களேன் என்றுகூற, நானும் என்னவென்று கவனிக்க...

 எங்கள் ஊரில் தேவதையின் பெயரில் இயங்கிவரும் பள்ளி ஒன்று உண்டு. கட்டுபாடுகளுக்கு பெயர்பெற்ற பள்ளி ஆகும்.தலைமையாசிரியர் மிகவும் கண்டிப்பானவர்.மாணவர்கள் மட்டும்இன்றி பெற்றோர்களுக்கும் அவர் சிம்மசொப்பனம்.

  அந்த பள்ளியில்தான் என் மகள் எட்டாம்வகுப்பு படித்துவருகிறாள்.அங்கு பணிபுரியும் ஆசிரியைஒருவர் வகுப்பிற்கு பாடம் நடத்தவந்தாலே மாணவமாணவியர் அனைவரும் கலங்கும் அளவிற்க்கு அவரின் செய்கைகள்...

 வகுப்புஅறையில்...மாணவியரின் பாலுறுப்புகளை பற்றியும் மாணவர்களை மாணவியரோடு இனைத்துபேசுவதும், மாணவிகளிடம் இவைதானே உங்களுக்கும் பிடிக்கும் என்றும் கேட்டுகிண்டலடிப்பதே வாடிக்கையாம்.

  மாணவ,மாணவியர்களுக்கு வீட்டில் சொன்னால் பள்ளியில் தெறிந்து அதன் காரணமாக வகுப்பில் ஆசிரியையால் தண்டிக்கபடவேண்டுமே என்ற பயத்தில் யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல் இருக்க என்மகளோ என் மனைவியிடம் கூறி பள்ளிக்குவந்து தலைமையாசிரியரிடம் தெரியபடுத்து என்று கூறி பள்ளி செல்ல செய்தி இப்பொழுது உங்களிடம்.....

 ஆமாம் ஆசிரியை பாலியல் கல்வியை எட்டாம் வகுப்பில் இருந்தே துவங்கி விட்டாறோ. ( திருமணம் ஆணவராம் )

 கட்டுபாடுகள் என்பது நமக்கு நாமே பின்பற்றதான் உருவாக்கப்படுகிறது.
இதைநினைவில் கொள்ளும் காலம் வரும் நேரம் எதுவோ...?

  மேற்கூறிய தகவல்களை மாவட்டகல்விஅதிகாரி,தலைமையாசிரியர் மற்றும் நிர்வாகத்தினர் பார்வைக்கு அனுப்பிஉள்ளேன்.

  நண்பர்களே,குழந்தைகளிடம் தேவையான நேரத்தில் வேண்டிய தகவல்களை கூறுங்கள்.அதேபோல் அனைத்தையும் அறியுங்கள். (விசாரணை அதிகாரி ஆகாதீர்கள்)

 இதை பற்றி நீங்க என்ன நினைகிறீர்கள்.....நமது நிருபர்.

3 comments:

இப்படி எல்லாமா...? கொடுமை...

குழந்தைகளுக்கு அந்தந்த வயதில் என்னென்ன தகவலை அறிய வேண்டுமோ அதை மட்டும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

என்னக் கொடுமை இது? மாணவர்களுக்கு நல்லவற்றை சொல்லித் தர வேண்டிய ஆசிரியை ஒருவர் இப்படி நடந்து கொள்ளுகிறார் என்றால்.... என்ன சொல்ல?

வருத்தத்தின் எல்லைக்கே போய் விட்டேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More