Latest News

நூல் அறிமுகம்


  புத்தகங்களை வாங்குவதிலும், சேகரிப்பதிலும் மற்றும் படிப்பதிலும் இவருக்கு இருந்த ஆர்வம் பள்ளிப் பருவத்திலிருந்தே அதிகம். பல ஆண்டுகளாக ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது படிக்கிற பழக்கத்தினை வளர்த்துக்  கொண்டார்

  இதனால் என்ன பயன் இவருக்கு என்று நீங்கள் என்னலாம், இவரை எந்த தலைப்பில் பேச அழைத்தாலும் எந்த நேரத்திலும் இவரால் பொருளோடும் சுவையாக பேச முடியும் 

காரணம்:
  படிக்கின்ற பொழுது படிப்பதோடு நின்று விடாமல் முக்கியமானவற்றை எழுதி வைத்துக் கொள்வேன். இவர் எப்படி செய்வது ஓரிரு ஆண்டுகள் அல்ல, கடந்த 56 ஆண்டுகளாக செய்து வருகின்றார்.

  இனி அவரே கூற கேட்போம்...
" ஒரு காலகட்டத்தில் இவற்றை தொகுத்து வெளியிட்டால் பயன் படுமே என்று கருதினேன். அப்போது பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் தொகுத்து வெளியிட்ட ஒரு தொகுப்பினை படித்தேன்.
என் நாமும் வெளியிட கூடாது  என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.

 நண்பர்கள் சிலர் '' நீங்கள் உங்கள் பேச்சில் பல சின்ன சின்ன  அபூர்வமான செய்திகளை சொல்கிறீர்கள்; அவைகளைத் தொகுத்து வெளியிட்டால் மற்றவர்கட்க்கு பயனுடையதாக இருக்குமே' என்று கேட்டு கொண்டனர்"

 என்னடா...? இவர் இவர்னு  சொல்றான், யார் அப்டின்னு சொல்ல மாட்டானா..

சொல்றேன்... இவர் பேராசிரியர் இரத்தின நடராசன்.

இவர் எழுதிய " சிந்திக்க .. சிரிக்க... சின்னச் சின்ன செய்திகள்" என்ற புத்தகம் கிடைத்தால் வாங்கி  படியுங்கள், நூலகங்களிலும் இருக்கும்.

ஆசிரியர் முகவரி :
187, ஆசிரயர் நகர்,
திருப்பத்தூர்-635501
அலைபேசி: 9345012330

                                                         நன்றி                  
                                                                     செழியன் 

Follow by Email

Recent Post