சமாளிப்போம் தீடீர் சூழ்நிலைகளை ...

  ஐன்ஸ்டீனின் கணித அறிவு பற்றி  அனைவரும் அறிந்ததே. அந நாட்களில் அவர் பல கல்லூரிகளில் அறிவியல் தொடர்பாக சொற்பொழிவு செய்து வந்தார்.

  அந்த சமயத்திலே " ஒரே மாதிரியான சொற்பொழிவை திரும்ப திரும்ப நிகழ்த்தி வருகின்றீர்கள்; ஆதலால் எனக்கு உங்கள் ஒவ்வொரு சொல்லும் மனப் பாடமாகி  விட்டது. மேடையேறி பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தல் , என்னை நீங்கள் என்று நினைக்கும் அளவிற்கு உங்களை போலவே பேசுவேன்"என்றாராம் அவருடைய ஓட்டுனர். ஐன்ஸ்டீனுக்கோ ஒரே ஆச்சரியம்.
                                                

  ஒரு முறை ஐன்ஸ்டீன் அவரை அதிகம் பார்த்திராத பல்கலைக் கழகத்திற்கு வாகனத்திலே சென்று  இருந்த பொழுது ஓட்டுனரை பார்த்து " இந்த  இடத்திலே எனக்கு பதில்  நீ சொற்பொழிவு செய் " என்றாராம்.

 ஓட்டுனரும் வைப்பு கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு சொற்பிழை கூட  இல்லாமல், ஐன்ஸ்டீன் தான் பேசினார் என்னும் அளவிற்கு பேசி முடித்தார்.

  முடிவில் ஒரு பேராசியர், அவரிடம் வந்து கணக்கில் சில புரியாத  விளக்கம் கேட்டார்.

  "வசமாக மாட்டிக் கொண்டார்" என்று ஐன்ஸ்டீன் மனம் மகிழ்ந்த பொழுது " இத்தனை  சுலபமான கேள்விகளுக்கான  விடையை என் ஓட்டுனரே  சொல்லி விடுவார், அதோ..!அவரையே கேளுங்கள் " எண்டு ஐன்ஸ்டீனை காட்டினாராம்.

 ஐன்ஸ்டீன் வாயடைத்து  போனாராம், ஓட்டுனரின் சமயோசித அறிவை நினைத்து. 

  இது உண்மை சம்பவமா அல்லது கற்பனையா என்று விவாதிப்பதை விட இதன் உட் பொருளை அறிவது அனைவரும் அறிவது அவசியம்.

  நாம் பல நேரங்களில் இது போன்ற நிலைகளில் மாட்டிக் கொண்டு திருடனை போல விழிப்போம். இனி சூழ்நிலைகளை சமாளிக்க கற்றுக் கொள்வோம். 


         அனைவருக்கும் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.


                                                  நன்றி 
                                                               செழியன்

4 comments:

அருமை...

இன்றைய மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று - சமயோசித புத்தி...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

அருமையான பதிவு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
மங்களம் நிறைய,
மகிழ்வொடு வாழ்த்துவம்!

inia deepavali valthukkal ....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More