சுருளும் மடிக் கணினி

சுருளும் மடிக் கணினி ( THE ROLLING LAPTOP) என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா...! உண்மை தான். எதுவுமே சுருக்கமாய், இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இதனை உருவாக்க வடிவமைப் பாளர்கள் முயன்று வருகின்றார்கள். 

 சிறிய கைப் பை போன்று எங்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். குட்டிப் பாய் போலத் தான் இதனை விரித்து உபயோகிக்கலாம். ( படுத்துடக் கூடாது )

 திரையை,விசைப் பலகையையும் கூட சுருட்டிக் கொள்ளலாம், எவ்வளவு வசதி பாருங்கள். 

உங்களுக்காக இதோ படங்கள்: அப்போ சுட்டெலி(mouse) எங்க இருக்கும்? மடிக் கணினி போலத்தான், விசைப் பலகையோடு சேர்ந்தே இருக்கும், தனியாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

 ஒரு பக்கம், குளிர்ந்த காற்று உள்ளே செல்ல வசதி, அடுத்த பக்கம் சூடான காற்று வெளியே செல்ல வசதியும் கூட இருக்கிறது 

நெகிழக் கூடிய (OLED) வகையில் திரை வடிவமைக்கப்ப்படுகிறது. 

கைப் பிடியில் விரல் அளவு நினைவகத்தினை இணைக்கலாம் அட...

 இன்னும் வடிவமைப்பில் தான் இருக்கிறது, வந்ததும் வாங்கிடலாம் சரியா , விலை தான் கொஞ்சம் அதிகமா இருக்கும்.

       கவிதை 

சுருளும் கணினியே 
சுருண்டு கொள்வாய் உனக்குள்ளே 
ஆமை போலே...

நீ பெரிய ஆள் தான்;
அரசனையும் உன் முன்-
குனிய வைத்து விடுகிறாயே.

எங்கள் வாழ்வையும் 
சுருட்டிக் கொ(ல்)ள்கிறாயே...
            ----
( நானும் இனி மோகன் சஞ்சீவன் அவர்களைப் போலே அறிவியல் சம்பந்தமான பதிவுகளையும் பதிவிடலாம் என்று இருக்கிறேன். இது என்னுடைய முதல் பதிவு புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றியது. என் குரு மோகன் சஞ்சீவன் ஐயா அவர்களுக்கு எனது காணிக்கை, உங்கள் கருத்தினையும் பகிர்ந்திடுங்கள் )


இதையும் படியுங்கள் 


                                                  நன்றி 
                                                              செழியன் 

4 comments:

மோகன் சஞ்சீவன் ஐயா அவர்கள் பல அறியாத தகவல்களை, புதிய தொழிற்நுட்பத்தை செய்திகளை அறிந்து கொள்கிறேன்... வியப்படைகிறேன்... நீங்களும் அது போல் தொடர்வது மிக்க மகிழ்ச்சி...

கவிதையுடன் கலக்கிட்டீங்க... நன்றி...

எப்படி அண்ணா, உங்களால் மட்டும் பதிவிட்ட உடனே கருத்துரை இடுகின்றீர்கள் , நன்றி அண்ணா

நல்ல தகவல் செழியன்,இந்த சுருள் கணினியின் ஆங்கில பெயர் என்ன?

நன்றி விஜயன், ஆங்கிலப் பெயர் ROLLING LAPTOP

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More