நிலவிலும் பிஸ்ஸா(pizza) உணவகம்!

 

 dominos_restaurant_moon2


 நிலவில் இன்னும் எந்த குடியிருப்பும் இல்லை. அங்கும் யாரும்  குடியேறவும் இல்லை. அதற்குள் டொமினோ பிஸ்ஸா தயாரிப்பு நிறுவனத்தின் ஜப்பானிய கிளை நிலவில் தன் கிளையாக ஒரு உணவகம்  நிறுவி அங்கும் நிலவு வாசிகளுக்கு  பிஸ்ஸாநேரடி விற்பனை மற்றும் வீட்டு விநியோகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. கட்டுமான நிறுவனம்  மேடா  கார்ப்பரேசன் இதை அங்கு கட்டும். கோள வடிவ குவிந்த கூரை  கொண்ட  இரண்டு மாடி கட்டிடத்தில் அதன் ஸ்டீல் தகடுகள் பொருத்தப் பட்ட அடிப்பகுதியுடன் அமையும் இது.

இன்னும் சில உணவகத்தின் கற்பனை படங்களை இங்கே காணலாம்

Domino's plans pizza on the MoonLunar Pizza

ஜப்பானிய ஜனாதிபதி ஸ்காட்  ஒல்கர் சே இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பை செய்தார். நாங்கள் நிலவில் பிஸ்ஸா உணவகம் அமைப்பது ஒரு
வேடிக்கையான   முட்டாள்தனமான யோசனையாக உங்களுக்குப் படலாம். ஆனால் நிலாவில் பிஸ்ஸா உணவகம் அமைப்பது எங்கள் கனவு என்றார் .

நிலவில் எப்படியும் முதலில் விண்வெளி வீரர்களும் பிறகு மக்களும் குடியேறுவார்கள் . அந்த சமயத்தில்  560 பில்லியன்  யென் செலவில் 70   டன் கட்டுமானப் பொருட்களும்  பிஸ்ஸா தயாரிப்புக் கருவிகளும்   ராக்கட்டுகளில்  கொண்டு செல்லப் பட்டு உணவகம் அமைக்கப் படும். அங்கேயே கிடைக்கும் தாது பொருட்களை  வைத்து கான்க்ரீட் தயாரிப்பதன் மூலம் கட்டிடச் செலவு குறைக்கப் படும்

இது எங்கள் எதிர் கால திட்டம் என்றாலும் எப்போது இது நிறைவேறும் என்பது தெரியாது என்கிறது டொமினோ நிறுவனம்

ஒரு ஜோக்:

ஜ:ப்பான்காரங்க நிலாவுக்குப் போய் பிஸ்ஸா விக்கப் போறாங்கலாமில்ல

கேரளாக்காரர் : அவங்க போகட்டும் நாங்க அதுக்கு முன்னே அங்கே போய் அவங்களுக்கே டீ விக்க ரெடி!

தமிழர்கள்: இதுக்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யணும் எங்க தலைவர்கள் தலைமை தாங்கணும்.  அப்பதான் நிலவு வாழ்க. நிலவு பிசாசு , என்ன அது? ஆங் நிலவு பிஸ்ஸா வாழ்கன்னு சொல்லுவம். மத்ததெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்!
4 comments:

தகவலும் நகைச்சுவையும் அருமை...

நன்றி...

Nice... if possible means happy...

உங்கள் படங்களும் நகைச்சுவையும் அருமை.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More