சுழலும் இறக்கைகள்(rotating blades) இல்லாத காற்று மின் சக்தி டர்பைன்கள்!
உலகில் எங்கெங்கும் பிய்த்துக் கொண்டு பறக்கும் காற்றின் சக்தி அளவில்லாதது . . இந்த சக்தியைப் பயன் படுத்தி உலக முழுதும் உள்ள மக்களுக்கு மின் சக்தி வழங்க முடியும் . காற்று மின் சக்தி பெற  காற்றாலைகள் கொண்ட காற்று சக்திப் பண்ணைகள் காற்று பலமாக வீசும் பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் சுழலும் இறக்கைகள் தான் காற்றின் சக்தியை மின் சக்தியாக மாற்ற உதவுகின்றன .இவற்றைக் காட்டிலும் 2.3 மடங்கு அதிகமாக காற்று சக்தியை மின் சக்தியை  காற்று டர்பைன் உருவாக்கப் பட்டுள்ளது . இதில் சுழலும் இறக்கைகள் இல்லை. தொலைக் காட்சி மற்றும் இதர அலைகளை கிரகிக்கும் செயற்கைக் கோள் தட்டைப் போல இருக்கும் இது பழைய காலத்துக் கப்பல்களில் காற்றின் சக்தியைப் பயன் படுத்தி கப்பலை ஓட்டும் பாய் மரங்கள் போல செயல் போடுகின்றன. இந்த பாய் மரங்கள் இப்போதும் சில படகுகளை ஓட்டிச் செல்ல பயன் படுகின்றன.

இந்த செயற்கை கோள் தட்டு மாதிரியான டர்பைன் சுழல்வதற்கு பதிலாக அடிக்கும் காற்றுக்குத் தகுந்த படி முன்னும் பின்னும் அசைந்து அதனுடன் இணைந்த பிஸ்டன்களை இயக்குகிறது. இந்த பிஸ்டன்கள் ஒரு திரவ சக்தித் தொகுதியுடன் இணைக்கப் பட்டுள்ளன. இவை பிச்டங்கள் தரும் சக்தியை சேமிக்கவும் இல்லாவிட்டால் உடனடியாக ஜெனரேட்டர் மூலமாக மின்சக்தியாக மாற்றவும் கூடியது.

80 சதம் வரை காற்று சக்தியை பயன் படுத்தும் இது தொடக்கத்தில் நிறுவும் அடிப்படைக் கட்டமைப்பு செலவில் 45 சதம் மிச்சப் படுத்துகிறது.

 இதன் காப்புரிமையை வைத்து இருக்கும் சபோன் எனர்ஜி நிறுவனம் உலக முழுதும் இதைத் தயாரித்து விநியோகிக்கும் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு சேர முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.

1 comments:

அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்...

நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More