முதுகிற்கு பின்னால் பார்க்க வேண்டுமா? எதிராளியின் கண்களை பார் - மனதோடு விளையாடு - 5

ஆழ்மனது தரும் செய்திகளை  உங்களால் புரிந்துகொள்ள முடியும்பட்சத்தில், எதிராளியின் உள்ளுணர்வுகளை நீங்கள் எளிதாக வசீகரித்து விட முடியும். எதிராளியின் பாவனைகள், செயல்கள் அனைத்தையுமே உங்களால் எளிதாக படிக்க முடியும்,

தொடர்ந்து மனதோடு விளையாடினால் !!


ஒருமுறை விவேகானந்தர் மாணவர்கள் சிலருடன், மனதை அமைதிபடுத்துவதன் மூலம் அடையும் மகத்தான பலன்களை பற்றி  சொற்பொழிவாற்றி கொண்டிருந்தார்.

"அரைமணி நேர தியானம் செய்வது என்பது ஆறு மணி நேர தூங்குவதற்கு சமமான பலனை கொடுக்கும்" என்றார்.

அருகில் கவனித்து கொண்டிருந்த மாணவர்களுள் ஒருவன் எழுந்து, "அப்படியென்றால் ஆறு மணி நேரம் தூங்கினால் அரைமணி நேரம் தியனம் செய்வதற்கு சமம் தானே?" என்று கேட்டான்.

அவன் கண்களில் தான் படித்த கேலி சிந்தனைக்கு புதிய வடிவத்தில் பதிலை கொடுத்தார் விவேகானந்தார்.

" முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக மாறி விடுவான், அறிவாளி தூங்கத் துவங்கினால் முட்டாளாகிறான்" என்றார் புன்னகையோடு.உங்களையும் அறியாமல் உங்கள் குணாதியங்களை பாதிக்க கூடிய சந்தர்ப்பம் உங்களுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு உண்டு

ஒவ்வொருவரும் தான் வளரும் சூழ்நிலைகளின்  தன்மைகளுக்கு ஏற்ப குணாதியங்களை பெற்றிருக்கின்றனர். குழந்தை பருவத்திலிருந்தே தான் பார்த்து பழகிய காட்சிகள், மனிதர்களின் இயல்புகளுக்கு ஏற்ப ஆழ்மனதானது சில வடிவங்களை பதிய வைத்து கொள்கிறது.  அதன் படியே மனிதரின் குணம் மாறுபடுகிறது.

நல்ல சூழலில் வளர்க்கப்பட்டாலும் சில குழந்தைகள் எதிர் சிந்தைனையுடைவர்களாக மாறும் வாய்ப்பையும் இந்த ஆழ்மனதின் அச்சினை பொறுத்தே அமைகிறது.

இந்த கோட்பாட்டின் படி உங்கள் எதிரில் இருப்பவரை நீங்கள் சுலபமாக வசியபடுத்த முடியும். அவர்களின் சில செய்கைகள் உங்களுக்கு அவர்களின் மனதில் உள்ள அச்சின் வடிவத்தை உணர்த்தி விடும். அந்த நுணுக்கமான அங்க அசைவுகள் உங்களால் படிக்க முடியும் பட்சத்தில் நீங்கள் சொல்வதை அவர் அமோதிக்க துவங்கி விடுவார்.

அது சரி,  எப்படி அந்த சந்தர்பத்தை நான் அடையவது?

மனோவியல் என்பது உடல் அசைவுகளின் மொழி கொண்டும் கணிக்கப்படுகிறது. ஒருவரது ஆழ்மனதில் பதிந்துள்ள செய்கைகள் அனிச்சையாக உடலின் அசைவுகளில் பளிச்சிடுகிறது

எஸ்கிலேட்டர் எனப்படும் தானாக மேலே நகரும் படிக்கட்டில் ஏறும் போது உங்கள் கரங்கள் கைப்பிடியை தானாக தளுவுவது உங்கள் ஆழ்மனதின் வெளிப்பாடே ஆகும். புற மனது தன்னை படிக்கட்டு கீழே தள்ளிவிடாது என்பதை உணர்ந்திருந்தாலும் ஆழ்மனது பாதுகாப்பை உணர்த்துகிறது.

நீங்கள் அலைபேசியில் பேசியபடியே வாகனத்தை ஓட்டும் ஒருவரை கவனித்து பாருங்கள். வேகத்தடை திடீரென்று முளைக்கும் போது அவரின் கால் உடனே பிரேக்கை மிதிக்க ஆழ்மனது கட்டளையிட்டு விடும்.

மூளையின் நியூரான்களின் இந்த தூண்டுதலுக்கு காரணம் ஏற்கனவே ஆழ்மனதால், 'இந்த செய்கைக்கு எதிர்வினை இந்த செய்கை' என்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆழ்மன பதிவானது எந்த நிலையிலும் அன்னிச்சையாக விளிப்படைந்து ஒருவரது செயலை நடத்திவிடுகிறது

இதன்படியே, நீங்கள் ஒருவரின் ஆழ்மனதை படிக்க நினைக்கும் போது அவரின் அங்க அசைவுகளை துல்லியமாக கவனிக்க வேண்டும். முறையான பயிற்சி பெற்ற உளவியலாளர் ஒருவர் இந்த கலையில் இன்னும் வேறுவிதமான வித்தைகளையும் கையாளுகிறார்.  அதாவாது எதிராளியின் எண்ணங்களை தான் படிப்பதற்கு மாறாக தனது எண்ணத்தை எதிராளிக்கு புரிய வைத்து விடுவதுதான். பாலின ஈர்ப்பு செய்ல்பாடுகளின் மூலம் இதனை இன்னும் தெளிவாக பிறகு வரும் பதிவுகளில் காணலாம்.

எதிரே உள்ள ஒருவரின் அங்க செயல்பாடுகளை கூர்மையாக கவனிக்கும் போது அந்த அறையின் வெப்பநிலை, வெளி சூழலின் நிலைமை போன்றவைகளிலும் உங்கள் கவனம் இருக்க வேண்டும்.

காரணம், உங்கள் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்திலும், வெளிப்புறத்தில் இருந்து வரும் சப்தம், வெளிச்சம் போன்ற ஏதாவது ஒரு காரணி முழுமையாக அவரின் மனதை படிக்க விடாமல் உங்களை குழப்புவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

புகழ்பெற்ற ஸ்காட்லான்ட் காவல் துறை உயர் அதிகாரிகள் கூட, மிகவும் ரகசியமான தங்களின் விசாரனைகளின் போது குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் பேசுவது கிடையாது.  மாறாக குற்றவாளியின் மனதை  அமைதிபடுத்தி அவரின் அங்க அசைவுகளை கவனிப்பதின் மூலம் உண்மை நிலையை கண்டறிய பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

ஒருவரின் மனது அமைதியாக இருக்கும் பொழுது அவரின் ஆழ்மனதை மிக எளிதாக படிக்க முடியும். அதேவாறு நமது எண்ணங்களையும் அவர் மனதில் எளிமையாக விதைக்க முடியும். ஆக, உங்கள் எதிரே இருப்பவரின் மனதை அமைதி படுத்த "அவருடன் ஒத்துழைக்கும் விளையாட்டை விளையாடுங்கள்"

தொடர்ந்து விளையாடுவோம்.

3 comments:

உண்மை...

விளையாட்டை தொடர்கிறேன்...

ஓ...விளையாடலாமே...

மனதை ரிலாக்ஸ் பண்ண நாங்களும் வருகிறோம்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More