எங்கேயும் எப்போதும்


  தமிழகத்திலே பிறந்து தமிழகத்திலே வாழும் நதி எது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் தமிழர் தான். ஆம், பொருநை நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி  தான்.

  நான் இந்த நதி உற்பத்தியாகும் மலை அடிவாரத்திலே இருக்கும் பாபநாசம் என்ற ஊரில் தான் குழந்தை பருவத்தில் இருந்து பள்ளிப் பருவம் வரை வசித்தேன். 


  தற்பொழுது சூழ்நிலையின் காரணமாய் நெல்லை மாநகரில் வசிக்கிறேன். "நீ எங்க இருந்தா எங்களுக்கு என்னல " என்ற உங்கள் மன ஓட்டம் என் செவிகளில் கேட்கிறது.

  அடிக்கடி அங்கே சென்று வருவோம் குடும்பத்துடன், சமீபத்திலே என் அத்தானின் பொன்னுருக்கள் விழாவிற்கு சென்று விட்டு நெல்லை திரும்பி கொண்டு இருந்தோம்.  சன்னல் வழியே வேடிக்கை பார்பதென்றால் எனக்கு கொள்ளைப் பிரியம்.

அப்படியாக  நான் வேடிக்கை பார்க்கும்  பொழுது  தீடீர் என்று சலசலப்பு சப்தம் என் கவனத்தை ஈர்த்தது, எனக்கு முந்தய இருக்கையில் ஒரு 35 வயது மதிக்கத் தக்க ஒரு ஆண் அமர்ந்து இருந்தார். அவரிடம் ஒரு பெண் கையில் குழந்தையோடு கெஞ்சிக்கொண்டு இருந்தார்.

இதோ அவர்களின் உரையாடல் நெல்லை பேச்சு வழக்கில்...

" ஐயா, கொஞ்சம் எடம் மாறி உக்காருதியலா"

"என்னமா, நா வீரவநல்லூர்ல  இருந்தே ஒவ்வொரு எடமா மாறி உக்காந்துட்டே  வாரேன், எனக்கு இதான் சோலியா, போம்மா"

அந்தப் பெண் வேறு இடம் கிடைக்குமா, என்ற ஆதங்கத்தோடு, தேடி இடம் கிடைத்து அமர்ந்து விட்டார்.

இதனைப் பார்த்த பொழுது "எங்கேயும் எப்போதும்" திரைப் படம் தான் ஞாபகம் வந்தது.உங்களுக்கும் தோன்றும் என நினைக்கிறன். அதிலே அந்த நடிகர், பேருந்து காட்சியில் இடம் கொடுப்பார். ஆனால் நான் பார்த்தவரோ வில்லனாகவே எனக்கு தெரிந்தார்.

 என்னதான் தனிப் பட்ட முறையில் அவர் மனம் சோர்ந்து இருந்தாலோ, ஒரு வேளை  வீட்டில் மனைவியிடம் சண்டை போட்டு அடி வாங்கி  கொண்டு வந்தாரோ என்னவோ... ஹி  ஹி...

அதனை எல்லாம் ஏன் ஒரு அப்பாவி அபலைப் பெண்ணிடமா  காட்ட வேண்டும், அவர் என்ன சொத்தையா கேட்டார். அதுவும் இடம் மாறி தான் உக்காரச் சொன்னார், நிற்கச் சொல்லவில்லை. 

என்ன பிறவிகளோ இவர்கள், எங்க ஊர் பக்கம் இப்படி ஆட்களை கண்டால்
 " பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?" என்பர்.

எங்கேயும் எப்போதும்  இவர்கள் இப்படி இருந்தால், பிறந்தென்ன பயன், வாழ்ந்தென்ன பயன்.

இது போன்ற நிகழ்வுகளை அறியும் பொழுது, நாம் இப்படி இருக்ககூடாது என்பதற்கு சமூகம் கற்றுத் தரும் பாடமாகவே எண்ணுகிறேன்.

 சுவற்றில் இடதுகாலை வைத்து வலது காலை தூக்கி அடிப்பதற்கு பெயர் பெற்றவரின் செயல்களோடு நான்  முரண் பட்டாலும், அவரின் கொள்கை என்னை கவர்ந்த ஒன்று "இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே" என்ன சரிதானே? நீங்களே சொல்லுங்கள்.
  
                                                       நன்றி 
                                                                    செழியன்

6 comments:

நன்றி அண்ணா, உங்கள் பாராட்டுதல் தான் மேலும் எழுத ஊக்கப் படுத்துகிறது.
உங்களைப் பற்றி அறிமுகம் தரலாமா? என்ன செய்கிறீர்கள் இது போன்று ....

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க நானும் கல்லிடைக்குறிச்சி தான்

எங்கேயும் எப்போதும் இவர்கள் இப்படி இருந்தால், பிறந்தென்ன பயன், வாழ்ந்தென்ன பயன். ?????

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More