Latest News

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி - 2

கடந்த பகுதியில் சில போது அறிவு தகவல்கள் பார்த்தோம் . இந்த பகுதியில் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம் . இதில் உள்ள தகவல்கள் உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்த படித்த தகவல்களை இங்கே பதிகிறேன் .


  • சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.


  • ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.


  • சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.


  • ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.


  • குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.


  • சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதைகணக்கிட்டுள்ளனர்.


  • அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள்புதைத்துவிடுவார்கள்.


  • சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.


  • பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.


  • நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.


  • நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...

  • ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

Follow by Email

Recent Post