யார் பொறுப்பு ?


கடந்த சில நாட்களுக்கு முன் நான்கு மாணவர்கள் பேருந்தின்  படியில் பயணம் செய்யும் போது லாரி மோதிய விபத்தில் பலியாகினர் . இதுப்போல பள்ளி மாணவர்கள் சிலர் அடிகடி விபத்தில் பலியாகும் கதைகள் தொடர்கதைகளாக நடக்கின்றன . இதுக்கு என்ன காரணம் , யார் பொறுப்பு ?

வாகனத்தை  இயக்கும்  ஓட்டுனர்களா ? மாணவர்களா ? பெற்றோர்களா ? அரசா ? இதுப்போல நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

என்ன செய்யலாம் ?

மாணவர்கள் முடிந்த அளவு படியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் . 

நடத்துனர்கள் மாணவர்களை கண்டிக்க வேண்டும் , அதுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .


மாணவர்கள் பயணம் செய்ய வசதியாக அரசு அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் .

பேருந்துகள் சரியான , தேவையான நேரத்தில் இயக்கப்பட வேண்டும் .


ஓட்டுனர்கள் சரியான நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த வேண்டும் . தள்ளி நிறுத்துவதால் மாணவர்கள் ஓடி ஏறுகின்றனர் . இதனால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது .

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேருந்தில் எப்படி செல்ல வேண்டும் என கூறவேண்டும் .

படியில் பயணம் செய்யும் மாணவர்களை போது மக்களே அல்லது மற்ற பயணிகளும் கண்டிக்கலாம் , அனைவரும் கண்டிப்பதால் மாணவர்கள் அது போல செய்ய பயபடுவார்கள் .

இலவச பேருந்து அட்டை முலம் பயணம் செய்யும் மாணவர்களை கேவலமாக பார்க்கும் வழக்கத்தை நடத்துனர்களும் , போது மக்களும் விட வேண்டும் .( அரசு இலவசமா எது குடுத்தாலும் தானும் வரிசையில் நிற்போம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் )

மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை நினைத்து அவர்கள்  உங்களுக்காக படும் கஷ்டத்தை நினைத்து இது போட்ன்ற தவறு நடைபெறாமல் நடக்க வேண்டும் .


டிஸ்கி : உங்களுக்கு இதுப்போல வேறு வழிகள் தோன்றினால் சொல்லுங்கள் .

2 comments:

ஒவ்வொரும் அவரவர்கள் காரியங்களுக்கு அவரவர்களே பொறுப்பு!

கண் மூடித்தனமாக வாகனங்களை ஓட்டி, நம் கண் எதிரிலேயே ஒருவர் விபத்துக்குள்ளானாலும், நமக்கு எதுவும் ஆகாது என்று அதே போல வாகனங்களை ஓட்டுகிறார்களே, என்ன சொல்வது?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More