அந்தரத்தில் மிதக்கும் புகை போக்கி!

 http://img.gawkerassets.com/img/187s28sx4l3g4jpg/original.jpg

 
புகையை வெளியேற்றும் புகை போக்கி செங்குத்தாக மேலே நீள்வதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே இருக்கிற புகை போக்கியின் மேல் பாகம் அறுத்து தொங்க விட்டதைப் போல இல்லை? அட ஆமாம் ! அப்படிதான் தெரிகிறது. உண்மையிலையே அப்படி அந்தரத்தில் தொங்குகிறதா? இல்லை. மேல் இருக்கும் ஐந்து வளையப் பகுதிகள் இரவு என்றால் இரவு பகல் என்றால் பகல் என்ன நிறமோ அதை அப்படியே பிரதிபலிக்கும் படி அமைக்கப் பட்டிருக்கின்றன. இதனால் அந்தப் பகுதிகள் மறைந்து போனது போல ஒரு தோற்றம் ஏற்பட்டு நம் கண்ணைக் கட்டுகிறது.  தூரத்தில் இருந்து பார்க்கும் போது கண்ணுக்குத் தெரியமால் இருக்கும் இந்த வளையப் பகுதிகள் அருகில் போய் பார்த்தல் கண்ணுக்குப் புலனாவதை தெரிந்து கொள்ளலாம்

இதை இப்படி வடிமைத்தது ஹாம்பர்க் நகர கட்டிட நிறுவனம். நம்மூரிலும் இப்படி ஒன்று இருந்தால் தேவலை. கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம். சின்னப் பசங்களுக்கு வேடிக்கையும் காட்டலாம்

This Smokestack Looks Like It's Sliced Up and Floating In Mid-Air

3 comments:

வர்ணஜாலம் அருமை தகவலுக்கு நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More