பெற்றோரே சிந்திப்பீரோ ..?

பழமையில் தான் எத்தனை எத்தனை வளமைகள் இருந்தது. மறுக்க முடியுமா ? மறைக்கத்தான் முடியுமா ? குழந்தை வளர்ப்பு என்று எடுத்துக்கொண்டாலும். அன்றைய கால கட்டத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆதலால் பிள்ளைகள் தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தி சித்தப்பா என பெரிய வட்டத்தில் நடக்கப் பழகி விட்டுக்கொடுக்க ,அன்பாயிருக்க , அனுசரித்துப் போக இப்படி சரியான அனுகுமுறையில் வளர்ந்தனர். அடுத்தவரை ஏசினாலும் அது தவறென உணர்த்த உடன் இருக்கும் முதுமைகள். காவியக் கதைகளை சொல்லி கவனிப்புடன் வளர்த்த விதம் இன்று காணமல் போனதின் விளைவு...


தாத்தா பாட்டி உறவுகள் யாரென்று தெரியாத நிலையில் உறவுகள் என்றாலே விலகி நின்று எதிரியைப்போல பார்க்க பழக்கி. தனிமைச் சிறையில்தொலைக்காட்சியிலும் கணிணியிலும் இரவு பகலை கழித் ததின் விளைவு தான் என்ற அகங்காரமும் தான்தோன்றித்தனமும் வளர்ந்தது தான் மிச்சம். இதில் எல்லாம் என் பிள்ளைகள் கற்க நினைக்கும் பெற்றோர் அழகு தமிழை கற்க கற்பதை மட்டும் ஏளனம் என நினைப்பது தான் விந்தை. பாட்டு கூத்து என பல துறைகளில் நவீன முறையை கற்க துறத்தி விடும் பெற்றோர் அதிலே ஏன் பழமை கலாச்சாரங்கள் நிறைந்த நாட்டியம் நாடகத்துறை  போன்ற வற்றை கற்க அனுபுவதில்லை என்பதே என் கேள்வி. ஆடம்பரம் அலங்காரம் நிறைந்த சினிமா துறையே வாழ்க்கையின் அவசியம் என இன்றைய தலைமுறைக்கு தப்பான கண்ணோட்டத்தை நாமே தான் நம் சந்ததியினருக்கு கற்றுத் தருகிறோம் அதன் விளைவு ஆபத்தான செயல்கள் கோபம் கொலை என நீண்ட பட்டியலில் கொண்டு சேர்க்கிறது.குழந்தை பெற்றோரின்  பெயர் சொல்லி அழைப்பதையும் அடித்து விளையாடுவதையும் ரசிக்கும் நாம் அதனை உற்சாக படுத்தியும் மற்றவர்களை அப்படி பேச சொல்லிக்கொடுத்து மரியாதை என்ற குணத்தை மறக்கச் செய்வதும் நாமே. நாம் நமது எனும் எண்ணத்தையம் எனிது என்னுடையது என்ற குறுகிய வட்டத்தில் சுருக்கி எதிலும் தாமே முதல் நிற்க ஒரு வித வெறி கலந்த உணர்வினை வளர்த்து விடுகிறோம்.  சிறந்த கல்வி சிறப்பான உடை இப்படி எல்லா வற்றிலும் முதன்மையானதை தேடிக்கொடுக்கும் நாம் தான் நம் பிள்ளைகளுக்கு சரியான நேர்த்தியான நேர்மையான வழி நடத்தலை கொடுக்க மறுக்கிறோம். அன்பைப் புகட்டுங்கள் அறிவைக் கல்விக் கூடங்களில் தேடுங்கள். வீண் விவாதத்திலும் விளம்பர உலகத்திலும் நம் சந்ததியை நாமே தள்ளாதிருப்போம் .

5 comments:

ரொம்ப சரியா சொல்லி இருக்கே. இன்றைய குழந்தைகள் வலர்ந்துவரும் நிலயப்பாத்தா சங்கடமா இருக்கு பயம்மாவும் இருக்கு வழிகாட்ட வேண்டியவங்க சும்மா இருக்காங்களே?

நம் இளமையில் பல சுகங்களுக்காக கூட்டுகுடும்பங்களை விட்டுபிரிந்தோம் பின் அனைத்திலும் தனிமையிலேயே இனிமை கண்டோம்,வழக்கமாகிபோன இதனையொட்டிய இன்றைதலைமுறைபெற்றோர் இதனினும் இனிமைகானும் முயற்சிகளின் விளைவுகளே இவை.வளரும்தலைமுறைபெற்றோர்கள் இதனை கடந்து சென்றுவிட்டார்களே...? என்ன செய்ய முடிகிறது நம்மால்...? இதை பற்றி பதிவிடுவதும்,பதிளிடுவதையும் தவிர...நாம்தானே சமூகம்...? நல்லதொரு சூடு...நன்றி சசிகலா வாழ்த்துக்கள் என்றும்....

லஷ்மி அம்மா உங்களைப்போன்றவங்க தான் வழி காட்டனும். நன்றிம்மா.

மதுர கவி...

வணக்கம்ங்க இன்றைய நிலைய அழகா சொன்னீங்க. முதலில் நாமும் பின் நம்மை சுற்றி இருப்பவர்களையும் அடுத்து உறவுகளை இப்படி ஒவ்வொருவராக திருந்தினால் நிச்சயம் நல்ல சமுதாயம் உருவாகலாம் இந்த நம்பிக்கையிலேயே கழிகிறது நாட்கள் நன்றிங்க.

சரியான கோணத்தில் முதல் பதிவு...

தொடருங்கள் சகோதரி..

வாழ்த்துகள்!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More