ஸ்கைப் மூலம் கிராமப் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவசர உதவி மருத்துவர்கள்

 

 

 
ஸ்கைப் என்பது ஸ்கைப் என்ற  பெயர் கொண்ட இணைய தளத்தில் காணொளி மூலம் பேசப் படும் நேரலை உரையாடல்.இந்த வசதியைப் பயன் படுத்தி பெரிய நகரங்களில் உள்ள எல்லா வசதிகளும் எல்லா சிகிச்சைகளும் கொண்ட பெரிய மருத்துவமனைகளுக்கு வர முடியாத நோயாளிகளுக்கான ஆலோசனைகளை பெரு நகர அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் அங்குள்ள பொது மருத்துவர்களுக்கு வழங்கி தகுந்த சிகிச்சை பெற செய்கின்றனர்.

தொலை தூர நோயாளிகளையும் அவர்களுடைய பொது ,மருத்துவர்களையும் இணையத்தில் பார்க்கும் இந்த மருத்துவர்கள் எக்ஸ் ரேக்கள் மற்றும் அவர்ககளுடைய மற்ற பரிசோதனை முடிவுகளையும் வைத்து என்ன விதமான சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்து தொலை தூர மருத்துவர்களுக்கு தெரிவிக்கிறார்கள்.


இந்த ஏற்பாடுகளை அவேரா மருத்துவ வலைப் பின்னல்  நிறுவனம் செய்து தருகிறது. இந்த வசதி அமெரிக்காவின்  ஐயோவா. மின்னெசோட்டா , நெப்ராஸ்கா ,வட டகோடா , தெற்கு டகோட்டா , வயோமிங் மாநிலங்களில் உள்ள 62 மருத்துவ மனைகளில் செய்து தந்துள்ளது அவேரா . இதன் மூலம் இது வரை 4200 நோயோளிகள் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்

உயர் தொழில் நுட்பத்தின் மிக உதவி செய்யும் பயன் பாடு இது. தொழில் நுட்பத்தை வாழ்த்துவோம்!

5 comments:

பின்னூட்டத்துக்கு நன்றி. அறிவியல் தகவல்களை உங்களைப் போலவே எல்லோரும் ஆர்வமுடன் படித்தால் உற்சாகம் தருவதாக இருக்கும்.

இதை இணையத்தில் பகிரும் போது இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத யாருடைய படமோ வருகிறது. தொழிற் களம் இதை கவனிக்கவும் . இதனால் பகிர இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

உயர் தொழில் நுட்பத்தின் மிக உதவி செய்யும் பயன் பாடு இது. தொழில் நுட்பத்தை வாழ்த்துவோம்!உண்மைதான் இன்றைய தொழினுட்பத்தின் வளர்ச்சி கண்டு வியந்து நிற்கின்றது உலகம் .அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களுக்கு பயன் படுத்துவது நல்லதுதான் .. தகவலுக்கு நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More