Latest News

காகிதக் கழிவில் இருந்து செங்கற்கள்!

 
 
காகிதக் கழிவில் இருந்து கட்டிடம் கட்டும் கற்கள் தயாரிக்கும் பசுமை தொழில் நுட்பத்தை ஸ்பெயின் நாட்டு ஜேயென் பல்கலை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். 
காகித ஆலைகளின் செல்லுலோஸ் கழிவு,   ஆலையின் கழிவுத் தண்ணீரை சுத்தப் படுத்தும் போது கிடைக்கும் கசடு ஆகியவற்றை சேகரித்து கூட கட்டிடம் கட்ட பயன் படுத்தும் களி மண் சேர்த்து அழுத்தத்திற்கு உட்படுத்தி ஒரு துவாரம் வழியாகப் பிழிந்து கற்களை எடுத்தார்கள். . பிறகு அவற்றை துண்டு துண்டாக வெட்டி சூளையில் சுட்டார்கள் . இப்போது கட்டிடக் கல் தயாராகி விட்டது.

இந்தக் கல் தயாரிப்பிற்கு வழக்கமான கல் தயாரிப்பை விட குறைந்த நேரமே ஆயிற்று . இதனால் சக்தியும் செலவும் மிச்சம்.  இவை குறை வெப்ப கடத்திகளாக இருப்பதால் கட்டிடத்திற்கு ஒரு வெப்பக் காப்புறை போல செயல் படுகின்றன. இவை வழக்கமான கற்களை விட கொஞ்சம்  வலு  குறைவு  அளவும் குறைவு ஆனால் கட்டிடத்தை சுமக்கிற அளவுக்கு வலு போதுமானவை ஆக உள்ளன. 
மேலும் தொடர்கிற ஆய்வுகளில் நல்ல வலு மிக்க தேவையான அளவுள்ள கற்கள் உருவாக்கப் படும்

ஜோக்:

எங்கே இருந்த காகிதமெல்லாம்? பழைய பேப்பர் காரருக்கு போடலாம்

அதெல்லாம் கல்லா மாத்தற சூளைக்கு  போய் கல்லாயிடுச்சு!












Follow by Email

Recent Post