தொழிற்சாலைகளுக்கு வரபிரசாதமாக ஒரு காற்று சுத்தப் படுத்தி!


ஐரோப்பாவில் காற்றை மாசு படுத்தும் வேதிதொழிற்சாலைகளை மூடச் சொல்கிறது ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைப்பு. கோப்பேனஹேகன் பல்கலையின் வேதியியல் துறை ஆராய்ச்சியாளர் மேத்யூ ஜான்சன் வேதி மாசுக்களை சுத்தப் படுத்தும் ஒரு காற்று சுத்தப் படுத்தியை  உருவாக்கியுள்ளார் . இவருடைய முயற்ச்சிக்கு இன்பூசர்  என்கிற முதலீடாலர் ஆதரவு தர டென்மார்க் நாட்டு ஜிஸ்க் மிலோஜோரின் என்கிற தொழிற் சாலையில் ஆய்வு செய்து பார்த்தார். அதில் தொழிற் சாலையின் வேதி மாசுக்கள் முழுமையாக அகற்றப் படுவது உறுதி படுத்தப் பட்டது.

சுற்று சூழல் தன்னிடம் வந்து சேருகிற மாசுக்களை தானாகவே சுத்தப் படுத்திக் கொள்வதை அடியொற்றி  இந்த காற்று சுத்தப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது. தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி மாசுக்கள் காற்று மண்டலத்தில் உள்ள ஓசான் வாயுவுடன் சேர்ந்து கூட்டுப் பொருட்களை உருவாக்குகிறது.  அந்த கூட்டுப் பொருட்கள் மழை பெய்யும் போது மழையுடன் சேர்ந்து பூமிக்கு வந்து விடுகின்றன இதனால்  காற்று மண்டலம் சுத்தமாகி விடுகிறது. இந்த முறையைத்தான் பின் பற்றி தனது காற்று சுத்தப் படுதியை உருவாக்கியுள்ளார் மேத்யூ ஜான்சன்

 Den fotokemiske reaktor installeret på taget af Jysk Miljørens A/S
காற்று மண்டல ஒளி வேதி முடுக்கி என்பது இவர் கண்டு பிடித்த கருவியின் பெயர்.. தொழிற் சாலையின் கூரையின் மீது ஆறு அலுமினிய பெட்டிகளில் வைக்கப் பட்டு வேதி மாசுக்களை அகற்றுகிறது. இந்த கருவி நிறுவப் பட்டதில் இருந்து கோபமாக புகார் கூறிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் இப்போது தொழிற் சாலையுடன் சுமுகமாக உள்ளனர். 

அபாரக் கண்டு பிடிப்பால் பிழைத்தது இந்த தொழிற் சாலை!


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More