உலகின் மிக நீண்ட அதி வேக ஜிகு ஜிகு ரயில் பாதை!

 
 
 
 
 
அதி வேக ரயில்கள் ஏற்கனவே இயக்கத்தில் இருக்கின்றன. இருந்தாலும் மிக அதிக தூரம் வரை அதி வேகத்தில் செல்லும் பாதை 1200 மைல்கள் சீனாவின் பெய்ஜிங் மற்றும் குவாங்லூ நகரங்களுக்கு இடையில் உபயோகத்திற்கு வந்து  உலகின் மிக நீண்ட அதி வேக ரயில் பாதை என்ற பட்டதைப் பெறுகிறது. இதற்கு இணையான பாதையில் பழைய ரயில்கள் 21 மணி நேரத்தில் கடந்து வரும் போது இந்தப் பாதையில் அதி வேக ரயில் 8 மணி நேரத்தில் அந்தத் தூரத்தைக் கடந்து விடுகிறது. 
 
இதன் வேகம் மணிக்கு 300 கிலோ மீட்டர் (186 மைல்கள் ). நியூ யார்க்கில் இருந்து மியாமி இந்தப் பாதையின் நீளத்தை  விட குறைவான தூரம் தான். ஆனால் இதை அமெரிக்காவின் ஆம்ட்ராக் ரயில் கடக்க 30 மணி நேரம் ஆகிறதாம். 
 
சீனாவில் இது வரை 5800 மைல்கள் அளவு அதி வேக ரயில் பாதை போடப் பட்டுள்ளது . 2015 க்குள் இதை ``11,000 மைல்கள் ஆக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. சீனாவில் இது வரை 5800 மைல்கள் அளவு அதி வேக ரயில் பாதை போடப் பட்டுள்ளது . 2015 க்குள் இதை ``11,000 மைல்கள் ஆக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. அதி வேக ரயிலின் கட்டணம் தான் கொஞ்சம் அதிகமாக இருப்பதாக நினைக்கிறார்கள். நேர மிச்சத்துக்கு கொடுக்க வேண்டிய விலை இது. 
 
எப்ப வரும் இந்த ரயில் நம்ம ஊருக்கு?

 

2 comments:

அடுத்த தலைமுறையினர் அமைத்திடுவர் என நம்புவோம். வரனும்...?

விரைவான மாற்றங்களும் வரத்தான் செய்கின்றன. உதாரணம் கைப் பேசி மற்றும் இணையம் அது போல் அதி வேக ரயில் திட்டம் இந்தியாவில் பரிசீலனையில் உள்ளது. தலை நகர் தில்லியில் மெட்ரோ ரயில் என்பது பரவலாக வந்துள்ளது. அதனால் இதுவும் வரலாம்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More